உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தமிழகக் கடலோர மீனவர்களுக்கு ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்

கடலூர்:

            தமிழகக் கடலோர மீனவர்களுக்கு உதவும் வகையில், ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த நிறுவனம் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

              கடலோர மீனவர்களுக்கு ஒலி வடிவில் செல்போன் குறுஞ்செய்திகள், காலநிலை, முன் எச்சரிக்கை, மீன்களை சிறப்பாகக் கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மீனை மாற்றி வாழ்வாதாரத்தை உயர்த்துதல், கடல் வளங்களைப் பாதுகாத்தல், மீனவர் நண்பர் தொலைபேசிச் சேவை உள்ளிட்ட சேவைகளை கிராம வள மையங்கள், கிராம அறிவு மையங்கள் வாயிலாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் முதல்முறையாக, இந்தியக் கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து, மீனவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஹெல்ப்லைன் சேவையை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

                 இதன் மூலம் மீனவர்களுக்குத் தேவையான காலநிலைத் தகவல்களும், பயிற்சி மற்றும் மேம்பாடு சார்ந்த கேள்விகளுக்கும் தொலைபேசி வாயிலாக பதில் அளிக்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

             மீனவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 92824- 42312 மற்றும் 98424- 42311 என்ற ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு, உரையாடலாம் தகவல்களைப் பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior