உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 30, 2011

16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு

             "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

            மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இவர்களது பணி தாற்காலிகமானது என்றும் அரசு அறிவித்துள்ளது. 

 இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:  

             இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் தமிழகத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.  மொத்தமுள்ள 16,549 பணியிடங்களில் கலைப்படிப்புகளுக்காக 5,253 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்காக 5,392 பணியிடங்களும், கைத்தொழில் படிப்புகளுக்காக 5,904 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பரிந்துரைகளை "அனைவருக்கும் கல்வி இயக்கம்' அரசுக்கு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த பிறகு, இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிமுறைகள் விவரம்: தேர்வுக் குழு உறுப்பினர்கள்: 

               மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர் செயலராக இருப்பார்.  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்  பெறுவர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள்.  இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வரவேற்கப்பட வேண்டும். தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். உள்ளூர் விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.  இதில் 10 சதவீத ஆசிரியர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஓர் ஆண்டுவரை இருக்கும்.  பகுதி நேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தகவல்பலகை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்.  இதுதொடர்பான பதிவேட்டை தனியாகப் பராமரிக்க வேண்டும். 

 தற்காலிகமான நியமனம் மட்டுமே...  

          பகுதிநேர ஆசிரியர் நியமனம் என்பது இந்தத் திட்டம் அமலில் உள்ள வரையிலான தாற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும். தேவைப்பட்டால் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.  அரசு விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அவர்களுக்கு வேறு விடுமுறைகள் கிடையாது. அவர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது.  இந்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் கற்பித்தல் பணி வழங்கப்படும். அவர்களுக்கான சம்பளம் "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கிராம கல்விக் குழுக்களுக்கு வழங்கப்படும். 

              அந்தக் குழுக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சம்பளத்தை வழங்குவார். இந்தப் பகுதிநேர ஆசிரியர்களின் சேவையை அருகில் உள்ள 4 பள்ளிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும்போது அதற்குரிய சம்பளத்தை அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  இந்த நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















 

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.

              கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 15 முதல் 30 நாள்களுக்குள்ளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

               இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் வோளாண் துறை அதிகாரிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் மற்றும் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குமராட்சி ஒன்றியம் வக்காரமாரி, தெம்மூர், நந்திமங்கலம், வீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விபரம் கேட்டறிந்தார். நந்திமங்கலத்தில் விவசாயி ஒருவர் உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரம் கிடைக்கவில்லை என ஆட்சிரிடம் புகார் தெரிவித்தார். 

    மேலும் இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. தீடீரென ஊருக்கு தண்ணீர் புகுந்து விடுவதால் வெளியேறுவது கஷ்டமாகிவிடுகிறது. எனவே நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பழைய கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நந்திமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நந்திமங்கலத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பின் பாலம் அமைக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயில் பொதுப்பணித்துறை விடுதியில் ஆட்சியர் அளித்த பேட்டி: 

               வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களிலிருந்து 30 நாள்களான பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். 30 நாள்களுக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்குவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே  அவற்றுக்கு நிவாரணம் வழங்கப்பட மாட்டாது. அதுபோல வெள்ளத்தில் வீடுகளை இழந்த குடும்பத்திற்கும், வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் பொது இடத்தில் தங்க வைக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.  

              மேலும் நந்திமங்கலம், வீரநத்தம் கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமுற்ற சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும் என்றார். நாக.முருகுமாறன் எம்எல்ஏ, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.















Read more »

கடலூர் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/962dcaf7-644f-4a1b-b88e-fd0d9fd37611_S_secvpf.gif
 
கடலூர்:

       கடலூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளேரிபட்டு ஊராட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பக்கிரி வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 305 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

 
                   தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மடிகணினி, முதியோர், மீனவர் உதவித்தொகை, ஆடு, மாடு உள்பட பல்வேறு திட்டங்கள் வழங்குவேன் என கூறினார். இதன்பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 7 கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.

           இதில் விலையில்லா அரிசி மற்றும் விலையில்லா திட்டங்கள் வழங்குவதற்கு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையும் உருவாக்கினார். இதில் தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டில் 25 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுகிறது. இவை 234 தொகுதிகளுக்கு வழங்கப்படும். இதில் முதலில் ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

                தற்போது வழங்கி வரும் விலையில்லா பொருட்களுக்கு இரண்டு வருடத்திற்கு உத்தரவாதம் உள்ளது. விலையில்லா பொருட்கள் ஒரு மாதத்தில் பழுது ஏற்பட்டால் புதிய பொருட்கள் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு பின்பு பழுதானால் பழுது பார்ப்பதற்காக சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு தான் பெண் கஷ்டம் தெரியும் என்பதற்கு ஏற்ப முதல்வர் ஜெயலலிதா விலையில்லா பொருட்கள் வழங்கி வருகிறார். இத்துடன் இந்த பொருட்கள் அனைத்தும் தாய் வீட்டு சீதனமாக பெற்று கொண்டு பெண்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.

            விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, பழனிசாமி, துணை தலைவர் பாலாம்பிகை, முத்துகுமாரசாமி, தாசில்தார் எழிலன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.   மேலும் விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பெரியதம்பி விழா தொகுத்து வழங்கினார்கள்.

                மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, நகரமன்ற உறுப்பினர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், கந்தன் மற்றும் ஆதிபெருமாள், ஜெயச்சந்திரன், ஜெயமூர்த்தி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வசந்த் நன்றி கூறினார்.  முன்னதாக மேல் அழிஞ்சுபட்டு ஊராட்சியில் 283 பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல்

 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/9f3cdffa-b3e9-4ed3-a6c8-a8092c351368_S_secvpf.gif
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மாசு கலந்த அசுத்தமான குடிநீர் வினியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தபட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

               இதையடுத்து கிராம மக்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடிநீரில் மழை நீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

             இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவைபுரம் கிராம மக்கள் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று திங்கட்கிழமை கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்கவில்லை.

              கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து கோட்டாட்சியர் இந்துமதிக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கோட்டாட்சியர் கடலூரில் இருந்து வர தாமதமானதால் தாசில்தார் ராஜேந்திரன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் தாசில்தாரிடம் உடனடியாக கோட்டாட்சியர் வர வேண்டும் என்று கூறினர்.

              இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் இந்துமதி சம்பவ இடத்துக்கு வந்தார். மேலும் தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.   காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு பக்கமும் அணிவகுத்து நின்றன.

            மறியல் போராட்டம் கைவிட்ட பின்பும் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

எய்ட்ஸ் நோய் பற்றிய விளக்கங்கள்

 
 
 
 
நாளை 01.12.2011..உலக எய்ட்ஸ் தினம்

எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :

        எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired - A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune - I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency - D குறைத்துவிடுதல்

Syndrome - S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

            இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?

                  எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

                 உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

எய்ட்ஸ் நோய் பரவும் விதம் :

             எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.


  1. உடல் உறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது "வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்"
  2. எய்ட்ஸ் வைரஉள்ளவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து, ஊசி குழல் சரியாக சுத்தம் செய்யப்படாமல் மற்றவருக்கு பயன்படுத்தும்போது
  3. இக்கிருமி உள்ளவர் இரத்தத்தை பிறருக்கு செலுத்தும்போது
  4. இவ்வைரஉள்ள தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுவிட்டால் இன்று அதற்கான சிகிச்சை கிடையாது / மருந்து கிடையாது.

              மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ளவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய அபாயமுள்ளவர்கள் :


  1. பால்வினை நோய்க்கு ஆளானவர்கள்
  2. பிறப்பு உறுப்பில் புண்களை உடையவர்கள்,
  3. பல்வேறு நபர்களோடு உடலுறவு கொள்பவர்கள், 
  4. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள், 
  5. போதை பொருட்களை உபயோகிப்பவர்கள்

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?

1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, 2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, 3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், 4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது

எய்ட்ஸ் நோய் எதனால் பரவாது ?

  1. எச்.ஐ.வி.பாதித்த நபருடன் கை குலுக்குவதால், 
  2. காற்று, நீர் போன்றவற்றால்,
  3. கொசு மூலம், 
  4. இந்நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடுவதால்

ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் :

நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆற்றுப்படுத்துதலும், இரத்தப்பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆலோசனை விவரங்களும், பரிசோதனை முடிவுகளும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசோதனை முடிவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் என்று தெரியவந்தால் ஆற்றுப்படுத்துதலும், அவர்கள் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

எச்.ஐ.வி.உள்ள கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி.இல்லாத குழந்தையைப் பெற முடியுமா? முடியும்.

              கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் நெவிரப்பின் என்ற மாத்திரை கொடுப்பதாலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தை எடைக்கு தகுந்தாற்போல் ஒரு கிலோவிற்கு 2.மி.கி. நெவிரப்பின் மருந்து கொடுப்பதாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி.பரவுவதை தடுக்க முடியும். இந்த வசதி அனைத்து அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளது. இங்கு இவர்களுக்கு எச்.ஐ.வி.இல்லாத குழந்தையை பெற்றெடுக்க ஆலோசனையும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் இந்நோய் பற்றி உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படவேண்டும். 
 
தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய இணையத்தளம்
 
இந்திய அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய இணையத்தளம்
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தை அடுத்த போட்டோடை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 52). மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவரும் திங்கட்கிழமை  காலை கடலில் படகில் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

             நடுக்கடலில் வந்தபோது பலத்த காற்றினால் படகு கவிழ்ந்தது. இதில் வடிவேலு படகின் அடியில் சிக்கிக் கொண்டார்.   வடிவேலுவை ராஜலிங்கம் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ராஜலிங்கம் கரைக்கு நீந்தி வந்து வடிவேலுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றொரு படகில் சென்று படகின் அடியில் சிக்கிக் கொண்ட வடிவேலுவை மீட்டனர். ஆனால் அவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read more »

செவ்வாய், நவம்பர் 29, 2011

கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற கோரிக்கை

            கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

           பழமையான நகரமான கடலூர், 15 ஆண்டுகளுக்கு முன் தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் உதயமானது. இங்கு 3 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும் உள்ளன. நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை பிரித்தாலும், கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்களுக்கு என்னவோ இதனால் ஒரு பயனும் இல்லை.   மாவட்டம் குறுக்கும் நெடுக்குமாக 130 கி.மீ நீளம் உள்ளதால் மாவட்டத்தின் கடைகோடியில் வசிப்பவர்கள் அலுவலகப் பணி நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். 

              திட்டக்குடியில் வசிக்கும் ஒருவர் கடலூருக்கு வந்து செல்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. அதிகாலை 6 மணிக்கு பஸ் பிடித்தால் தான் 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு அல்லது பிற இடங்களுக்கோ செல்லமுடியும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒருபுறம், திட்ட அதிகாரி அலுவலகம் ஒருபுறம், பஸ் நிலையம் ஒருபுறம், மாவட்ட மருத்துவமனை ஒருபுறம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால், மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளை விளையாட்டு தொடர்பாக மாவட்டத் தலைநகருக்கு அழைத்துச் செல்வதற்கு படாதபாடு படவேண்டியிருப்பதாக கடலூர் மேற்கு மாவட்டப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள் புலம்புகின்றனர். 

             எனவே மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்றவேண்டும் அல்லது ஒரு மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில், விழுப்புரம் மாவட்டம் அல்லது அரியலூர் அல்லது பெரம்பலூர் மாவட்டத்தோடு இப்பகுதியை இணைக்க வேண்டும் என கடலூர் மேற்கு மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். 













Read more »

திங்கள், நவம்பர் 28, 2011

கடலூர் மாவட்டத்தில் கனமழை : பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு

கடலூர்:
 
                 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டியது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பின.   அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 4,500 கனஅடி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

              ஏரியன் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஒடை வழியாக 2,500 கன அடிநீரும், வி.என்.எஸ். மதகு வழியாக 2,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மன வாய்க்காலில் இருந்து வரும் 12,500 கனஅடி தண்ணீர் சேர்ந்து பழைய கொள்ளிடத்தில் 15 ஆயிரம் கன அடியாக செல்வதால் கொள்ளிடம் கரை கிராமங்களான எடையார், திருநாரையூர், வீரநத்தம், நந்திமங்கலம், அத்திப்பட்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.  

                 வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணத்தின் மேல்கரை கிராமங்களான சித்தமல்லி, பா.புத்தூர் குடிகாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. சேத்தியாதோப்பு பாழ் வாய்க்கால் பகுதியில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்ட மதகு அருகில் கரையை உடைத்து வெள்ளாற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  
             
                   வீராணம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் ஜெயங்கொண்டம் பொன்னேரியில் இருந்து உவரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கெங்கால் ஓடை, பாப்பாக்குடி, ஓடை, கடுவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு 4,500 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஒடை வழியாக வெளியேற்றப்படும் 2,500 கன அடியும், மன வாய்க்காலில் இருந்து வரும் 12,500 கனஅடி நீரும் ஆக மொத்தம் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒரே நேரத்தில் செல்வதால் சிறகிழந்த நல்லூர் கிராமத்திற்கு செல்லும் மூங்கில் பாலம் அடித்து செல்லப்பட்டது. அந்த கிராமத்திற்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வீராணம் ஏரியில் உள்ள உபரிநீர் மற்றும் மணிமுத்தா நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோற கிராமங்களில் வசிப்பவர்கள் வெள் ளாற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் கொள்ளிடம் கரையோரம் உள்ள நந்திமங்கலம், வீரநத்தம், கிராமங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.  

           இந்நிலையில் தற்போதிய பருவமழை காரணமாக சேலம் பகுதியில் அதிக மழை பெய்ததால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெலிங்டன் ஏரிக்கு வரும் வாய்க்காலில் 2 ஆயிரத்து 918 கன அடியும், வெள்ளாற்றில் 3 ஆயிரத்து 75 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திட்டக்குடி பகுதியில் நேற்று இரவு தொழுதூரில் 145.3மி.மீ, பெலாந்துறையில் 112மி.மீ., கீழ்ச்செருவாயில் 150.2மி.மீ, மழை பெய்தது.

          இதனால் தற்போது வெலிங்டன் ஏரியில் 25.8 அடி தண்ணீர் பிடித்துள்ளது. அனைத்து துணை ஏரிகளும் நிரம்பி விட்டன.   வெலிங்டன் ஏரியின் பாசன ஆதாரமான அதர்நத்தம் கழுதூர் ஓடைகளில் தொடர் மழை காரணமாக வெள்ள வரத்து எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   குறிஞ்சிப்பாடியை அடுத்த கொளக்குடி, சிதம்பரம் அடுத்த வாழக்கொல்லை, துணிசரமேடு, முத்து கிருஷ்ணாபுரம், சேத்தியாதோப்பு அடுத்த மணல்மேடு, நெய்வேலி அடுத்த மேல்பாதி, குறிஞ்சி நகர், புது இளவரசன்பட்டு, பாப்பன்பட்டு, குமாராட்சி அடுத்த வீரநத்தம் கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் பள்ளி களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

            கடலூர் தாலுக்காவில் தொடர்ந்து பெய்த மழையால் 24 வீடுகளும், விருத்தாசலத்தில் 1 வீடும், குறிஞ்சிப்பாடியில் 2 வீடுகளும் சேதம் அடைந்தனர். சுவர் இடிந்ததில் கடலூரை சேர்ந்த கீர்த்தி, பில்லாலி கிராமத்தை சேர்ந்த அன்னக்கிளி, விருத்தாசலம் பவனூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல், பூமாலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.   தொடர்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தா நீர் மட்டம் 35-50 அடியாக உயர்ந்துள்ளது.

          இதையொட்டி அணையில் 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மணிமுத்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 5,140 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கம்மாபுரம் வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவான 5.5 அடியை எட்டியை நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 3,015 கனஅடி பரவனாற்றில் வெளியேற்றப்படுகிறது.

                இந்த நிலையில் என்.எல்.சி. சுரங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரவனாற்றில் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திட்டக்குடியில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/9cbb7612-2811-48cc-82b7-e893e68d8956_S_secvpf.gif
திட்டக்குடி:

              திட்டக்குடியை அடுத்துள்ள வாகையூர் கிராமத்தில் மேலவீதியில் சுமார் 60 வீடுகள் உள்ளன. மின்வாரியம் தெரு மிளக்கு வசதிகளை செய்துள்ளது. அனைத்து வீடுகளும் மின் இணைப்பு வசதி பெற்றுள்ளன. இந்த தெருவை தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கூல்வேன் தனியார் வேன்கள் கார்கள் அதிகமாக இயங்கும் முக்கியதெருவாகும்.

             இந்த தெருவில் 5 ஆண்டுகளுக்கு முன் மின் வாரிய கம்பம் ஒன்று மோசமாக பலவீனமடைந்து முறிந்து விழும் நிலையில் இருந்தது இதைபார்த்த மின் வாரிய அலுவலர்கள் அந்த கம்பத்தின் கீழ்ப்பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு ஜல்லியும் சிமென்டையும் கலந்து போட்டு பலவீனம் அடைந்தபகுதியை மட்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அந்த கம்பத்தில் 400 வோல்ட்ஸ் அபாயம் என சிவப்பால் எழுதப்பட்ட ஒரு போர்டை வைத்துள்ளனர். 
            ஆனால் 5ஆண்டுகளாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை மின் கம்பமும் சிறிதளவு சாய்ந்தே காணப்படுகிறது. தினமும் அவ்வழியாக செல்வோர் பயந்து பயந்துதான் செல்லுகின்றனர். அந்த மின் கம்பத்தை எடுத்து விட்டு நல்ல உறுதியான மின் கம்பத்தை போட்டால் இந்த தெருமக்களின் அச்சம் நீங்கும் என்பதுதான் இப்பகுதி மக்களின் ஒருமித்த கருத்து.

Read more »

Heavy Rain hits power generation at NeyveliHe

CUDDALORE: 

         Power generation at the Neyveli Lignite Corporation (NLC) was affected due to intermittent rain for the past three days leading to inundation of floodwaters in the mines. The generation of power dropped to around 1,300 MW in the past three days from the recent average generation of around 2,000 MW. The installed capacity of the NLC is 2,470 MW.

            Thermal power plant I generates less than 50 MW power as against its installed capacity of 600 MW, thermal power plant I expansion generates 200 MW as against its installed capacity of 420 MW and thermal power plant II generates around 1,000 MW as against its installed capacity of 1,470 MW. Power generated from thermal power station I was earmarked for Tamil Nadu and NLC alone. Mining operations of the corporation was affected for the past three days due to floodwaters following incessant rain. The pumping capacity to drain inundated water had been increased and the corporation was taking all measures to step up power generation.





Read more »

TN to set up 50 grain storage godowns to help small farmers including Cuddalore District

          In a move that will help small farmers store their produce when the market price is low, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Sunday ordered to set up 50 grain storage godowns at a cost of Rs 82 crore.

    “In order to better protect the produce of small farmers, aid their financial growth, help them sell their produce at a reasonable market price after the harvest and help them relieve themselves from the burden of loans, the government will open 50 grain storage godowns,” an official release said. These modern godowns will be equipped with weighing equipment, weighing stages and grain moisture testers, it said.

         Five godowns with a total capacity of 10,000 tonne with lorry parking facility at a cost of Rs 25 crore each will come up in Erode, Madurai, Thanjavur, Cuddalore and Villupuram districts. Eight godowns with a total capacity of 5,000 tonne with lorry parking facility at a cost of Rs 20 crore each will come up in Tiruvannamalai, Villupuram, Coimbatore, Erode and Thanjavur districts. Godowns with a capacity of 2,000 tonne at a total cost of Rs 37 crore will come up in 37 places across the state, it said. 








Read more »

விருத்தாசலத்தில் கனமழை - வெள்ளப்பெருக்கு புகைப்படங்கள்

கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கனமழை பெய்து வருகிறது.










http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/S.P.SEKAR/viruthachalam-1.jpg








http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/S.P.SEKAR/viruthachalam-2.jpg












http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/S.P.SEKAR/viruthachalam-3.jpg
















http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/S.P.SEKAR/viruthachalam-5.jpg


http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/S.P.SEKAR/viruthachalam-6.jpg

Read more »

சனி, நவம்பர் 26, 2011

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்: மாணவர் கைது

சிதம்பரம்:
 

                 சிதம்பரத்தில் பணம்-கொடுக்கல் வாங்கல் தகராறில் மாணவரை கடத்தி சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 மாணவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தை  சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 22). இவர் சிதம்பரம் முத்தையா நகரில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங்  இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

            இவருக்கும் அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஜாகீர் என்பவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு  ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அஜய்குமார்  தான் தங்கி இருந்த அறையில் இருந்தார்., அப்போது அங்கு வந்த ஜாகீர் மற்றும் தன்னுடன் படிக்கும்  நண்பர்களான சிவகங்கை மாவட்டம் வெள்ளை குளத்தை சேர்ந்த கண்ணன்  மற்றும் அனீஸ், ஜெகன், சிவா ஆகியோருடன் வந்தார்.

           பின்னர் அஜய்குமாரை ஜாகீர் உள்பட 5 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாங்கள் தங்கி இருந்த அறையில் கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர் தடியாலும், வயர் பூட்டாலும் அஜய்குமாரை தாக்கினர். இதுபோல இரவு முழுவதும் தாக்கி சித்ரவதை செய்தனர். இன்று  காலை அவர்களிடம்  இருந்து  தப்பி வந்த அஜய்குமார்  இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். ஜாகீர் உள்பட 4 மாணவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அண்ணாமலை நகரில்  பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
 
 
 
 
 

Read more »

வீராணம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

கடலூர்: 

     நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, வீராணம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
          கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 5000 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெள்ளியங்கால் ஓடையில் 2500 கனஅடியும், வெள்ளாற்றில் 2500 கனஅடி நீரும் விடுவிக்கப்படுகிறது. இத்துடன், மணவாய்க்காலில் வரும் 14 ஆயிரம் கன அடி நீரும் சேர்ந்து 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் பழைய கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, நவம்பர் 25, 2011

Heavy rains in Cuddalore District

         Heavy rains lashed Puducherry and nearby coastal areas In Cuddalore on Thursday. According to Met department, the rains caused by easterly “waves” were expected to continue till the weekend. The formation of a trough of low pressure near Kanyakumari was expected to add to the intensity of the rains in the next 48 hours.

          The downpour ensured that many roads across the town were inundated. To make matters worse, slabs covering recently desilted drains were yet to be replaced.The condition of most of the inner roads was pathetic as there was no proper maintenance for quite some time. Meanwhile, heavy and persistent rains that began on Wednesday night lashed Cuddalore district all through Thursday. Because of the continuous rainfall, students and office-goers suffered a lot as vehicle movement was slowed down in many places. Widespread rainfall was reported across the region.

          About 25,000 fishermen did not venture into sea, for the fourth day in a row, as heavy wind made fishing impossible. Due to the scarcity, the price of fish has shot up by 30 per cent.

As per data, 

Parangipet recorded 58 mm rainfall 
followed by Annamalai Nagar at 56 mm. 
Chidambaram and 
Cuddalore had 49 mm and 25 mm rainfall respectively. 

         Cuddalore Collector V Amuthavalli declared a holiday for schools on Friday due to the weather.







Read more »

Tipplers bridge across interstate river closed

CUDDALORE: 

        A wooden bridge across the Pennai river constructed by Puducherry wine shop owners to allow tipplers to reach their shops has landed them in trouble as PWD officials issued a notice, on Wednesday, for them to dismantle it within two days.The river separates a Tamil Nadu village, Velisemmandalam, and a Puducherry village, Aaraichikuppam.
 
         This close proximity has allowed tipplers from Tamil Nadu to cross the shallow river and buy alcohol from the three wine shops situated in Aaraichikuppam.  Due to the recent spate of rains, water flow in the river had increased making it difficult to wade across. Though some enthusiastic people walked through the river water to reach wine shops, many others were left in the lurch and consequently, sales in the shops had decreased considerably.
 
            To solve this problem, wine shop owners came up with the idea of constructing a wooden bridge across the river. Once constructed it became very popular and many people from Tamil Nadu began using it. The matter came to notice of PWD department in Cuddalore and it issued a notice to the wine shop owners to dismantle the bridge within two days. They claimed that the bridge was constructed without their permission. To make their stand clear, the department, on Wednesday, blocked one end of the bridge using trees and branches.










Read more »

வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை


ஆர்ப்பரிக்கும் அலைகளை பொருட்படுத்தாமல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கும் வடமாநில சுற்றுலாப் பயணிகள். (வலது படம்) கடல் சீற்றம் காரணமாக
கடலூர்:
            வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடலூர் மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. 20 அடி உயரம் வரை அலைகள் எழும்பி ஆர்ப்பரிப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். கடல் நீரோட்டம் பெரிதும் மாறியுள்ளது என்றும் தெரிவித்தனர். கடந்த 3 நாள்களாக அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல வில்லை. 20 முதல் 30 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பெரிய விசைப் படகுகளும் செவ்வாய்க்கிழமை கரை திரும்பின. 
இதுகுறித்து மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் கூறுகையில்,
            கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 மாதங்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கிய பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கடந்த 3 நாள்களாக கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. வியாழக்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்தி மீன்கள் பிடிக்கும் 100 படகுகள் மற்றும் வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் பிடிக்கும் கட்டுவலைப் படகுகளும் கடந்த 3 மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இப்போது ஏற்பட்டு இருக்கும் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிறிய படகுகளும் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. 















Read more »

கடலூரில் 28 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

கடலூர் : 

           கடலூரில் 28 கோடி ரூபாய்மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர்  ஆய்வு செய்தார். 

              கடலூர் மாவட்டத் தலைநகரான அரசு அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் தனியார் கட்டடங்களிலும், அரசு கட்டடங்களில் போதிய இடவசதி இல்லாமலும் இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன. வெவ்வேறு இடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க மற்ற மாவட்டங்களில் உருவாக்கியது போல் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் பெருந்திட்ட வளாகத்தை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

               அதன்பேரில் தற்போது கலெக்டர் அலுவலகம் இயங்கி வரும் இடத்தில் உள்ள குளத்தை மூடி, ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் 6 அடுக்கு கட்டடம் கட்ட கலெக்டர் அமுதவல்லி ஆலோசனையின் பேரில் பொதுப்பணித் துறை சார்பில் பூர்வாங்க திட்ட வரைபடத்துடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், கடலூரில் 28 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.












Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7.77 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கடலூர் : 

            கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டிற்கான நிதிக்குழுவின் இரண்டாம் தவணையாக 7 கோடியே 77 லட்சத்து 4,840 ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செலவினத்திற்காக ஊராட்சி நிதி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர்கள் தங்கள் ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்திட அறிவுறுத்தப்படுகின்றனர் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






Read more »

பா.ம.க. தொழிற்சங்க தலைவர் ஞானசேகரன் பா.ம.க.வில் இருந்து விலகி புதியக் கட்சித் தொடங்குகிறார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/839e76c2-9045-48c3-b89f-988c816085d6_S_secvpf.gif
 

 
          பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பா.ம.க. தொழிற்சங்க தலைவராக இருந்த ஞானசேகரனும் கட்சியில் இருந்து விலகி விட்டார்.   அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் பதவியில் இருக்கும் ஞானசேகரன் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
 
இதுபற்றி அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் ஞானசேகரன் கூறியது:-

                  கொள்கை ரீதியாக பா.ம.க. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் வசதி வாய்ப்புகள் பெருக பெருக டாக்டர் ராமதாஸ் மாறிவிட்டார். பணம்தான் முக்கிய குறிக்கோளாகிவிட்டது. பணக்காரர்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வேலை செய்யும் அமைப்பாக பா.ம.க. மாறி விட்டது.
 
              உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.   கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். இப்போது எங்கள் சங்கத்தில் 36 ஆயிரம் ரெயில்வே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக தொண்டர்களை திரட்டி உள்ளோம். பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய எந்த கட்சியும் தயாராக இல்லை. அவர்களுக்கு சேவை செய்ய அம்பேத்கார் பெயரில் புதிய கட்சி தொடங்குகிறோம். 1-ந்தேதி தியாகராயநகர் பி.டி. தியாகராயர் அரங்கில் விழா நடக்கிறது. அப்போது கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படும். பா.ம.க.வில் இருந்து விலகியவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் உள்பட அனைவரையும் புதிய இயக்கத்தில் இணைய அழைத்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 

 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நாள்: 260மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/d7b9a7b9-fe23-41ad-971f-3f1d0e514ba1_S_secvpf.gif
 
கடலூர் மாவட்ட  ஆட்சியர் அமுதவல்லி
 
கடலூர்:

                கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.   இதில் கலெக்டர் அமுதவல்லி பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட 260மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

               கூட்டத்தில் கலெக்டர் அமுதவல்லி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்ப்பில் 3 பேருக்கு இலவச சலவைப் பெட்டிகளை வழங்கினார். வருவாய்துறை மூலம் கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நாணமேடு கிராமத்தை சேர்ந்த தையல்நாயகியின் கணவர் சாமிதுரைக்கும், வடுகபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது கணவர் கலியமூர்த்திக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருவேங்கடம், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்ட நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரி, செய்தி மகக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மத்திய சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/ab8965a1-5eac-4308-a5af-2a2bc70bf599_S_secvpf.gif
 
கடலூர்:

             நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு உள்பட 2 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

           இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. பொன்முடிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பொன்முடியின் நிபந்தனை ஜாமீனுக்கான உத்தரவு நகலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா டேனியலிடம் தி.மு.க. வக்கீல்கள் நேற்று பெற்றனர். அந்த உத்தரவு நகலை கடலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வக்கீல்கள் ஒப்படைத்தனர்.  

              இதைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையிலிருந்து செவ்வாய்கிழமை  மாலை 4.15 மணிக்கு பொன்முடி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், அங்கையற்கண்ணி, தங்கராசு, ஏ.ஜி.ராஜேந்திரன், ஜனகராஜ் மற்றும் பலர் வரவேற்றனர். சிறையை விட்டு பொன்முடி வெளியே வந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியது
 
                முதல்வகுப்பு சிறைஎன்று கூறிவிட்டு வெளிச்சிறையில் அடைத்து வைத்திருந்தனர் என்று கூறினார். பின்னர் அவர் காரில் விழுப்புரம் புறப்பட்டு சென்றார். நிர்வாகிகள் அவரை அழைத்து சென்றார்கள். கடலூர் ஜெயிலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி 84 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், நவம்பர் 23, 2011

A bridge for tipplers that connects Cuddalore to Puducherry

arr_1.jpg.crop_display.jpg
Where there’s a will there’s a way — actually, a bridge. 


       Although the Pennaiyar river, flowing across the territorial limits of Puducherry and the neighbouring district of Cuddalore in Tamil Nadu, is in spate, curtailing the movement of people living in the outlying villages, tipplers who cross over from the border villages of Vellichimandalam and Chavady to arrack vends in Puducherry, known as a 'guzzlers paradise', do not lose heart.

        Arrack shop-owners in Puducherry, facing dull business over the last few weeks, used native knowledge and erected a makeshift wooden bridge to enable tipplers from Tamil Nadu reach arrack shops located at Araichikuppam in Puducherry. The floodwaters have gone down, but not the flow of tipplers. The 1-km-long ‘bridge’, supported by poles and wooden planks and connecting Vellichimandalam, Chavady and the surrounding villages of Cuddalore with the other side of the border, has been erected without authorisation.

          “The arrack shops at Araichikuppam in Kuruvinatham block have a good chunk of tipplers from Cuddalore and the surrounding villages because Puducherry is the only southern state licensed to sell arrack and toddy. It is a risk for the tipplers to move into Puducherry and walk away after taking the brew,” said an excise department official. “This is not the first time that such an adventurous initiative has been resorted to by the arrack shop-owners. An arrack shop-owner pressed a coracle into service to ferry tipplers from Tamil Nadu to Puducherry during heavy rains sometime back. However, the Cuddalore district administration issued a stern warning and closed the illegal service due to security risks,” said a senior official.It is surprising how the present bridge has escaped the attention of the law enforcement authorities on both sides of the border. It only proves that liquor knows no barriers and arrack vends at Araichikuppam do good business whether it rains or shines


Read more »

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் லட்சத்தீவில் 4 வகையான வண்ண இறால்கள் கண்டுபிடித்தனர்

பரங்கிப்பேட்டை : 

             லட்சத்தீவில், நான்கு வகையான வண்ண இறால்களை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

              கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதியுதவியுடன், லட்சத்தீவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சியின் போது, அங்கு நான்கு வகையான வண்ண இறால்களை, ஆராய்ச்சி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆராய்ச்சி மைய முதுநிலை அதிகாரி அஜீத்குமார் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை, அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் பாராட்டினார். 

இதுகுறித்து ஆராய்ச்சி மைய முதுநிலை அதிகாரி அஜீத்குமார் கூறியது: 

              நான்கு ஆண்டுகளாக, லட்சத்தீவில் அகாத்தி எனும் இடத்தில் வண்ண மீன் பொரிப்பகத்தை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு நான்கு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் டாடா குழுமம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், உற்பத்தி செய்த மீன் குஞ்சுகளை டாடா நிறுவனமே நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கிறது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய புல முதல்வர் பாலசுப்ரமணியன் அறிவுறுத்தலின் பேரில், லட்சத் தீவில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. தற்போது ஆராய்ச்சி மாணவர்கள், நான்கு வகையான வண்ண இறால்களை கண்டுபிடித்துள்ளனர். 

                   பல ஆராய்ச்சி நிறுவனங்கள், வெவ்வேறு காலக்கட்டங்களில் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்ட போதும், இதுபோன்ற வண்ண இறால்கள் கண்டறியப்படவில்லை. இந்த வண்ண இறால்களுக்கு, உலக வண்ணமீன் சந்தையில் தேவை அதிகம் இருப்பதால், லட்சத்தீவில் உள்ள பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கூடத்தில் பராமரித்து உற்பத்தி செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த மையம் ஏற்கனவே வண்ண மீன்கள் உற்பத்திக்கான தொழில் நுட்பத்தை தயாரித்துள்ளதால், வண்ண இறால்களையும் உற்பத்தி செய்வது எளிதானது. இவ்வாறு அஜீத்குமார் கூறினார்.











Read more »

கார்த்திகை தீப திருநாளையொட்டி விருத்தாசலத்தில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

விருத்தாசலம் :

           விருத்தாசலத்தில் கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. 

              தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் கொண்டாடும் வண்ணமயமான விழா கார்த்திகை தீப திருநாள் விழா. ஒளி வழிபாடாக நடைபெறும் இந்த விழாவன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனால் தீப திருநாள் காலத்தில் அகல் விற்பனை அமோகமாக நடைபெறும். கடந்த காலங்களில் களி மண்ணால் ஆன அகல் விளக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் மக்களின் ரசனைக்கு ஏற்ப பீங்கான் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 

               விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டையில் பீங்கான் மற்றும் "கிலே' கொண்டு அகல் விளக்கு தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது. சிவன், பெருமாள், அம்மன், துளசிமாட விளக்கு என பல்வேறு உருவங்களை கொண்டு 150க்கும் மேற்பட்ட வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். விளக்குகளின் தேவை அதிகம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் ஆட்களை அமர்த்தி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.










Read more »

செவ்வாய், நவம்பர் 22, 2011

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் 44-வது தேசிய நூலக வாரவிழா

கடலூர்:

         கடலூர் மாவட்ட அரசு நூலகங்களின் வாசகர்கள் எண்ணிக்கையை, 30 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.  44-வது தேசிய நூலக வாரவிழா, கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் நூல்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்  பேசியது:  

               நூலகங்கள் அறிவை வளர்ப்பவை. நூலகங்கள் பெருக வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மைய நூலகம் உள்ளிட்ட 135 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 63 கிளை நூலகங்கள், 28 பகுதி நேர நூலகங்கள், 43 ஊரக நூலகங்கள். இவற்றில் 1,40,025 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1,365 பேர் புரவலர்களாகச் சேர்ந்து உள்ளனர். அனைத்து நூலகங்களிலும் 21,19,786 புத்தகங்கள் உள்ளன.  2010-11-ம் ஆண்டில் 21,71,561 வாசகர்கள் இந்த நூலகங்களைப் பயன்படுத்தி உள்ளனர். வரும் ஆண்டில் வாசகர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக உயர வேண்டும். அதற்காக நூலகங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே நூலக அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.  

        கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு அரங்கம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்குகிறேன் என்றார். நூலகப் புரவலர்கள் சேர்க்கையைத் தொடங்கி வைத்து அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், நூலகங்கள் அறிவு சார்ந்தவை. நூலகத்தை அதிகமான வாசகர்கள் பயன்படுத்த வேண்டும். மக்களின் வரவேற்பை அதிகம் பெற்றதாக நூலகங்கள் அமைய வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். 

            நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இரா.பழநிசாமி, நகரச் செயலாளர் ஆர்.குமரன், நூலக வாசகர் வட்டத் தலைவர் தங்க சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் சின்னதம்பி வரவேற்றார். முதல் நிலை நூலகர் சந்திரபாபு நன்றி கூறினார். 












Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior