உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

தொடரும் கடல் அரிப்பு புதுச்சேரி அருகேவீடுகள் சேதம்

காலாப்பட்டு:

                               புதுச்சேரி அருகே சின்னமுதலியார்சாவடியில் தொடரும் கடல் அரிப்பால் கடந்த சில தினங்களில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அடிக்கடி கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடலரிப்பை தடுக்கக் கோரி இப்பகுதி மக்கள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து கடற்கரையோரங்களில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் வடக்கு பகுதியில் சுமார் 100 மீட்டர் அளவுக்கு கருங்கல் கொட்டப்படவில்லை. இதனால் கடலில் சீற்றம் ஏற்படும்போது, அப்பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு, வீடுகள் சேதமடைந்து வருகின்றன. தற்போது உருவாகிய வார்த் புயல் சின்னம் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிக மாக காணப்படுகிறது. மீனவர்கள் யாருக்கு கடலுக்கு செல்லவில்லை. கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக சின்னமுதலியார்சாவடி மீனவ பகுதி யில் 2 கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன. கரை யோர தென்னை மரங்கள் சரிந்து விழுந்தன. கடந்த சில தினங்களில் மட்டும் மொத்தம் 10 வீடுகள் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளன.  இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வடக்கு பகுதியிலும் 100 மீட்டர் அளவில் கருங்கல் கொட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior