கட லூர், நவ.30:
நவீன வேளாண் கருவிகளைக் காண்பதற்கும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் கடலூர் மாவட்ட விவசாயிகள் 37 பேர், தில்லிக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் தொழில்நுட்ப நிர்வாக முகமை (ஆத்மா) சார்பில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தில்லியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தேசிய விவசாயிகள் மாநாடு, வேளாண் கருத்தரங்கம் மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சியும் தில்லியில் நடைபெறுகிறது.
இந்தக் கருத்தரங்கில் கடலூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு நவீன வேளாண் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள இருக்கிறார்கள். வேளாண் கருவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டு அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் நமது விவசாயிகள் தெரிந்து கொள்வர்.
சேத் தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் கோ.விஜயகுமார், வெங்கடாம்பேட்டை உழவர் மன்றத் தலைவர் ஆறுமுகம், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி, காட்டுமன்னார்கோவில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் முத்துசாமி, புவனகிரி ஒன்றியச் செயலாளர் வி.என்.ஜெயராமன் உள்ளிட்ட விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், உழவர் மன்றங்களின் பிரதிநிதிகள் தில்லி சென்றுள்ள குழுவில் இடம்பெற்று உள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவியாக வேளாண் அலுவலர்களும் சென்றுள்ளனர். இவர்கள் 5-ம் தேதி தில்லியில் இருந்து கடலூர் திரும்புவர். தில்லி செல்லும் குழுவை கடலூரில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.
மா வட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் க.பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) த.மணி, வேளாண் அலுவலர் எஸ்.பூவராகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக