சிதம் பரம், நவ.30:
வனத்துறை கல்லூரி மாணவர்களின் குறை மிகவும் நியாயமானது. டிஎன்பிஎஸ்சியின் விதிமுறைகள் திருóத்தப்பட வேண்டும் என எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான் வனத்துறை அமைச்சராகவும், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது பெருமாள் கோயில்களில் அபிஷேகத்திற்கு போதிய அகில் (சாம்பிராணி) கிடைக்கவில்லை.÷நான் வனத்துறை அதிகாரிகளை கூப்பிட்டு அகில் மரம் அதிகம் வளர்க்க நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என கேட்ட போது, "அதுபோன்ற ஒருமரமே இல்லை' என அந்த அதிகாரி கூறிவிட்டார்.÷சங்க காலத்தில் மாத்திரமல்லாமல் பாவேந்தர் பாரதிதாசன் கூட அகிலும் தேக்கும் அழியா குன்றும் என பாடியிருக்கிறார் என்று நான் கேட்டதற்கு அதிகாரிகள் கவிகளின் கற்பனை என சொன்னார்கள். சாம்பிராணி மரம் என்று ஒன்றும் கிடையாது. அது வெளிநாட்டில்தான் வளரும் என பதில் அளித்தார்கள்.÷நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சுவாமியுடன் சேலம் சென்றபோது அந்நகரில் ஒருவர் வீட்டு முன்பு சாம்பிராணி மரம் இருப்பதை கண்டேன். வனத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமாக உபயோகப்படுத்தப்படும் மரங்கள் பற்றி தெரியவில்லை.÷ஏனென்றால் அவர்கள் தாவரவியல் படிக்கவில்லை. அன்றுமுதல் நான் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வன இலாகா அதிகாரிகள் பதவி தேர்வுக்கு தாவரவியல் பட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். தாவரயியல் படிக்கும் வனத்துறை கல்லூரி மாணவர்களை வனத்துறை அதிகாரிகள் பதவிக்கு தகுதி பெற்றவர்களாகிறார்கள். எனவே வனத்துறை கல்லூரி மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என அதிகாரியும் அம் மாணவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தின் மீது கவுன்சிலர்கள் புகார் பண்ருட்டி,நவ.30: பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து கவுன்சிலர்கள் நகர மன்றக் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.÷பண்ருட்டி நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சி வளாகத்தில் அதன் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:கிருஷ்ணமூர்த்தி(திமுக): நகராட்சியின் முக்கிய ஆவணங்கள் தனி நபர்கள் வசத்தில் உள்ளன. ஊழியர்கள் ஆவணங்களை வீட்டிற்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். சில காலமாக நிர்வாகத்தில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆளும் கட்சியில் உள்ளதால் அதிகம் பேச முடியவில்லை. இதற்கு ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்பழனி(திமுக): நகரப் பகுதியில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. அதிகாரிகள் நகரப் பகுதியை சுற்றி பார்த்து நடவடிக்கை எடுப்பது கிடையாது. குப்பைகளை அப்புறப்படுத்துவது கிடையாது, புதிய ஆணையர், பைபாஸ் சாலை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.சரஸ்வதி(அதிமுக): பலமுறை கோரிக்கை வைத்தும் 33-வது வார்டுக்கு எதுவும் செய்யவில்லை, கேட்டால் பணம் இல்லை என கூறுகிறீர்கள். எனது பகுதிக்கு சாலை, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.எம்.பச்சையப்பன்(தலைவர்): தங்கள் பகுதிக்கு செய்த பணிகள் குறித்த பட்டியலை தருகிறேன் பாருங்கள்.துரை ராமு(திமுக): சோமேஸ்வரர் கோயில் தெருவில் சாலை போட தீர்மானம் நிறைவேற்றி ஒரு ஆண்டு ஆகியும் சாலை போடவில்லை, பிறப்பு, இறப்பு சான்றுக்கு 4,5 நாள்கள் இழுத்தடிக்கின்றனர். ஒரு நாளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் பெட்டியில் போடும் மனுக்கள் தொலைந்து விட்டதாக ஊழியர்கள் கூறுகின்றனர். ÷பொது நிதியில் சிமென்ட் சாலை போடக் கூடாது என இதற்கு முன் இருந்த அதிகாரிகள் கூறி வந்தனர். போடலாமா, கூடாதா என கூற வேண்டும்.சக்திவேல் (பொறியாளர்): போடலாம்.பர மசிவம்(திமுக): சுடுகாடு சிமென்ட் சாலை போட்டதில் ஊழல் நடக்கிறது. மண் புழு உரக் குடோனால் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சக் திவேல்(பொறியாளர்): இடத்தை பார்வையிட்டு ஆவன செய்கிறேன்.தட்சிணாமூர்த்தி(திமுக): ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பத்துடன் பணம் வசூலிக்கப்பட்டும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்கு பின்னால் செயல்படுத்திய நெல்லிக்குப்பம் நகராட்சி செயல்படுத்தியுள்ளது. கடலூரில் பிறப்பு, இறப்பு சான்றுக்கு ரூ.2 வசூல் செய்கிறது. பண்ருட்டியில் ரூ.55 வசூல் செய்யப்படுகிறது ஏன் இந்த வேறுபாடுகள்? சண் முகம்(அதிமுக): நான்கு முனை சந்திப்பில் உள்ள சிக்னலில் தனியார் விளம்பரப் பலகையில் 30 லைட்டுகள் எரிகிறது. இதற்கு யார் அனுமதி அளித்தது. தனிப்பட்ட நபர் விளம்பரத்துக்காக நகராட்சி வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக