உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

திட்டக்குடி, பண்ருட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம்


டிச 01 , திட்டக்குடி: 


         திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. பள்ளி முதல்வர் கலைசெல்வி தலைமை தாங்கினார்.  உடற் கல்வி ஆசிரியர் தங்கதுரை வரவேற்றார்.  துணை முதல்வர் வரதராஜன், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பள்ளி தாளாளர் சிவகிருபா முகாமை தொடங்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் கள் பிர்வா, ருக்தா ஆகி யோர் தலைமையில் மருத்துவர்கள் குழுவினர்  கண்களை பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆசிரியர்கள் மகேஸ், புவனேஸ்வரி, சிலம்பரசி, சத்யா, சங்கீதா, சாந்தி, இளவரசி உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடு களை உதவிகளை பள்ளி சாரண சாரணிய மாணவர்கள் செய்தனர்.கள மேலாளர்  செந்தில்குமார் நன்றி கூறினார்.
பண்ருட்டி: பண்ருட்டி ஆரிய வைசிய சமூகம், வாசவி கிளப், கடலூர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை பண்ருட்டி சுப்பராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது.
முகாமை ஆரிய வைசிய சமூக நிர்வாகி அரிகரன் தொடங்கி வைத்தார். கலிபோர்னியா மருத்துவர் பார்பரா, உத்தரபிரதேச மருத்துவர் பல்லவி, புதுவை மருத்துவர்கள் ஷேமல், பத்திரிநாத் ஆகியோர் கொண்ட குழு 300க்கும் மேற்பட்டோருக்கு கண் சம்பந்தந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். 75 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஆரிய வைசிய சமூக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior