டிச 01 , கடலூர்:
தனியார் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடந்தது.
பண்ருட்டி அருகே மருங்கூரில் தனியார் டேனக்ஸ் அனல் மின் நிலையம் அமைப்பதை கண்டித்து தமிழ்நாடு அன்னை தெரசா பொது நல சேவை இயக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடத்தினர். தெரசா பொது நல சேவை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் ஆசை.தாமஸ் தலைமை தாங்கினார். ம.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு சிவக்குமார், புரட்சி பாரதம் மாவட்டத் தலைவர் தெய்வீகதாஸ், அ.தி.மு.க ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் தோப்புக்கொல்லை பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ மக்கள் கட்சி மதியழகன் வரவேற்றார். மாநிலத் தலைமை நிலைய செயலாளர் ரவீந்திரன் தொகுப்புரையாற்றினார்.மாணவர் பேரவை தலைவர் அகஸ்டியன் துவக்கவுரையாற்றினார். கடலூர் நகர மன்றத் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் பேசினார். கடலூர் வழக்கறிஞர் சங்கம் பிரேம்குமார் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். தெரசா பொது நல இயக்கத்தின் மாநிலப்பொருளாளர் சண்முகம், மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் கிருபாகரன், மாநில நிர்வாகக்குழுத் தலைவர் பச்சையப்பன், மாநில ஆலோசகர் ராஜேஷ் உட்பட பலர் பேசினர். கிராம பெண்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் எதிரே வயிற்றுலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக