டிச 01 , சிதம்பரம்:
சிதம்பரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
பெரும்பாலான சாலை விபத்துகள் ஓட்டுனர்களின் கவனக்குறைவினால் நடக்கிறது. சமீபத்தில் பெரியபட்டில் நடந்த பள்ளி வேன் விபத்தில் அந்த வாகனம் எப்சிக்கு வரும் போது அனைத்து விதிகளின் படி வாகனம் சரியாக இருந்தது. விபத்து நடந்த அன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறையான ஆவணங்கள், எச்சரிக்கை வாசகங்கள் இல்லாத வாகனங்கள் எப்சி செய்யப்படுவதில்லை. பள்ளி வாகனங்களை ஓட்டுபவர்கள் 5 வருடத்திற்கு குறையாத முன் அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும். பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்லும் போதும், வாகனங்களில் அனுப்பும் போதும் பெற்றோர்கள் முழுகவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை வாகனங்களில் ஏற்றாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். சாலை விதிகளை அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடித்தால் விபத்தில்லாத வாகனங்களை இயக்க முடியும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக