சிதம்பரம், நவ. 30:
நடைபெற உள்ள திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீனவர்களுக்கான கருப்பு தடை சட்டமான கடலோர மேலாண்மை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். என்எல்சி நிறுவனம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவதை தவிர்த்து கடலூர் மாவட்ட படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எதிர்வரும் காலங்களில் கடலூர் மாவட்டத்தில் வெள்ள அபாயத்தை தவிக்க அரசு நிரந்திர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் லட்சுமிகாந்தன்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் நன்னிலம் அழகுநம்பி வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டச் செயலாளர் வீரவன்னியவேங்கன், நிர்வாகக் குழு உறுப்பினர் அப்துல் லத்தீப், மாவட்டத் தலைவர் தியாகவல்லி தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பொருளாளர் முகமதுஅனீபா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக