கட லூர், நவ.30:
மக்கள் செல்ல பாதை இல்லாமல் ரயில் பாதையோரம் மதில் சுவர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லிக்குப்பம் பொதுமக்கள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நெல்லிக்குப்பம் பீட்டர் தெரு பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இப் பகுதியையொட்டி ரயில்பாதை ஓரமாக மதில்சுவர் வைக்க ரயில்வே இலாகா முடிவு செய்து இருக்கிறது.
இப்பகுதி மக்கள் சென்று வர நடைபாதை அளவுக்கு இடம் விட்டு மதில் சுவர் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரி வருகிறார்கள்.
பாதையின்றி ரயில்வே துறை மதில் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன், தமிழ் தேசிய கட்சி மாநில துணைச் செயலாளர் திருமார்பன், விடுதலைச் சிறுத்தைகள் வழக்கறிஞரணி மாவட்டச் செயலாளர் காத்தவராயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு, தொண்டரணிச் செயலாளர் ஸ்ரீதர், ஓவியர் அணி துணைச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக