உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

மாவட்டத்தில் ஏழாவது புதிய தாலுகா...இன்று உதயம்: தலைமையிடமாக மாறியது குறிஞ்சிப்பாடி

கடலூர்:

                      வருவாய்த் துறையின் நிர்வாக வசதிக்காக கடலூர் தாலுகாவை இரண் டாக பிரித்து குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா இன்று (23ம் தேதி) முதல் செயல்பட துவங்குகிறது. மாவட்டத்தின் 7வது தாலுகாவாக 26ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம் பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட் டக்குடி ஆகிய 6 தாலுகாக் கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.கடலூர் 136, பண்ருட்டி 114, விருத்தாசலம் 167, சிதம்பரம் 193, காட்டுமன் னார்கோவில் 161, திட்டக் குடி 130 வருவாய் கிராமங் கள் உள்ளடங்கியுள்ளன.

                இந்நிலையில் தற் போது நிர்வாகம் மற்றும் குறிஞ்சிப்பாடி பொதுமக்கள் வசதிக்காக மக்கள் தொகை அதிகம் உள்ள கடலூர் தாலுகாவை இரண் டாக பிரிக்க வேண்டும் என அமைச்சர் பன்னீர் செல்வம் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந் தார்.இதனைத் தொடர்ந்து கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் கருணாநிதி கடலூர் தாலுகாவை பிரித்து புதியதாக குறிஞ்சிப்பாடி தாலுகா உருவாக்கப்படும் என அறிவித்தார்.அதன் அடிப்படையில் தற்போது கடலூர் தாலுகாவில் இருந்த குறிஞ்சிப் பாடி (23 வருவாய் கிராமங்கள்), குள்ளஞ்சாவடி (22 வருவாய் கிராமங்கள்) மற்றும் பண்ருட்டி தாலுகாவில் இருந்த மருங்கூர் (14 வருவாய் கிராமங்கள்) குறு வட்டங்களை இணைத்து குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

                      இதில் மருங்கூர் குறுவட்டத்தில் இருந்த 14 வருவாய் கிராமங்களில் வடக்கு மேலூர் (நெய் வேலி நகரியம்), தெற்கு மேலூர், வேலுடையான் பட்டு, அத்திப்பட்டு, வானாதிராயபுரம், தென் குத்து, வடகுத்து, கீழூர், வெங்கடாம்பேட்டை வருவாய் கிராமங்களை குறிஞ்சிப்பாடி குறு வட் டத்துடனும், மதனகோபாலபுரம்,கோரணப்பட்டு, பேய்க்காநத்தம், புலியூர் ஆகிய வருவாய் கிராமங்கள் குள்ளஞ்சாடி குறு வட்டத்துடன் இணைக் கப்பட்டுள்ளன.

                     இதற்கான சிறப்பு அரசாணை (நிலை) எண் 483, நாள் 18.12.2009 அன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, புதிதாக பிரிக் கப்பட்டுள்ள குறிஞ்சிப் பாடி தாலுகா இன்று (23ம் தேதி) முதல் குறிஞ் சிப்பாடி எஸ்.கே.எஸ்.நகரில் இயங்கி வரும் துகில் கைத்தறி மற்றும் பட்டு கூட்டுறவு சங்கம் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட துவங்குகிறது.இதன் துவக்க விழா வரும் 26ம் தேதி குறிஞ் சிப்பாடியில் நடைபெறும் அரசு விழாவில், அமைச் சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய தாலுகாவை துவக்கி வைக்கிறார்.தாலுகா அலுவலகம் கட்ட குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் எதிரே புவனகிரி சாலையில் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது.

             புதிதாக துவங்கப்பட் டுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள குறிஞ் சிப்பாடி மற்றும் குள்ளஞ் சாவடி குறுவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்கள் விபரம் வருமாறு:குறிஞ்சிப்பாடி: மருவாய், நைனார்குப்பம், பார்வதிபுரம், குருவப்பன் பேட்டை, மோவூர் பேட்டை, பூதம்பாடி, சேராக்குப்பம், கொளக் குடி, கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி (வடக்கு), குறிஞ்சிப்பாடி (தெற்கு), கண்ணாடி, கல்குணம், கருங்குழி, பெத்தநாயக் கன்குப்பம், கஞ்சமநாதன் பேட்டை, எல்லப்பன் பேட்டை, ஆபத்தாரணபுரம், கஞ்சமநாதன் பேட்டை, விருப்பாட்சி, ஆடூர்குப்பம், ஆடூர் அகரம், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், வடக்கு மேலூர் (நெய்வேலி நகரியம்), தெற்கு மேலூர், வேலுடையான்பட்டு, அத்திப்பட்டு, வானதிராயபுரம், தென்குத்து, வடகுத்து, கீழூர், வெங்கடாம்பேட்டை, அன்னதானம்பேட்டை ஆகிய 33 வருவாய் கிராமங்கள் உள்ளன.

                         குள்ளஞ்சாவடி: வழுதலம்பட்டு, தையல்குணாம் பட்டினம், ரங்கநாதபுரம், பூவாணிக்குப்பம் வடக்கு மற்றும் தெற்கு, பி.பாளையம், தம்பிப்பேட்டை, கேசவநாராயணபுரம், ஆதிநாராயணபுரம் வடக்கு மற்றும் தெற்கு, கருவேப் பம்பாடி, கிருஷ்ணங்குப் பம், திம்மராவுத்தன்குப் பம், தோப்புக்கொல்லை, அம்பலவாணன்பேட்டை, அனுகம்பட்டு, அகரம் கிழக்கு மற்றும் மேற்கு, குண்டியமல்லூர் வடக்கு மற்றும் தெற்கு, ஆயிக்குப் பம், இடங்கொண்டான் பட்டு, அகத்திமாபுரம், தீர்த்தனகிரி, மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, பேய்க்காநத்தம், புலியூர் ஆகிய 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior