உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

ஆந்திராவில் இருந்து துப்பாக்கி 'சப்ளை' போலீஸ் விசாரணையில் 'திடுக்'

சிதம்பரம் :

             ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ள துப்பாக்கிகள் கடலூர் மாவட்டத் திற்கு சப்ளை ஆகிறது என் பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் சிதம்பரத்தில், ஆப்பிரிக்க நாட்டு பெண்ணிடம் தகராறு செய்த வல்லம்படுகை சிசுபாலன் என்ற வாலிபரிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

                  அதனை தொடர்ந்து விருத்தாசலத்தில் கடந்த நவ. 19ம் தேதி கொள்ளையடிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமுஷ் ணம் தியாகராஜனிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கடலூரில் கடந்த மாதம் 8ம் தேதி பொற்கொல்லர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி கொள்ளை அடிக்க முயன் றனர். அதே மாதம் 19ம் தேதி வடலூர் நகைக் கடை அதிபர் சிங்காரத்தை துப்பாக்கியால் சுட்டு மோட்டார் சைக்கிள் கொள்ளை அடிக்கப்பட்டது.

               கடந்த 5ம் தேதி கடலூர் முதுநகரில் மாடுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டன. கடந்த 7ம் தேதி சேத்தியாத்தோப்பு அள்ளூரில் குடும்ப தகராறில் சித்தப் பாவை துப்பாக்கி காட்டி கொலை செய்வதாக மிரட்டிய செந்தில்குமார் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் பரங்கிப் பேட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற வாலிபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கிகள் எங்கிருந்து கிடைக்கிறது. அதன் நெட் ஒர்க் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

                  ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளத்துப்பாகிகள் வாங்கி வரப்படுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவுபடி கடலூர் மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதற்காக சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தனிப் படை போலீசார், மாவட் டத்தில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விபரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏர் துப்பாக்கிகள்: கட்டுப்பாடு வருமா? :

                            ஏர் துப்பாக்கிகள் உண்மையான துப்பாக்கிகள் போன்றே உள்ளன. கடலூர் மாவட்டத்தில் ஏர் துப்பாக்கிகள் அதிகமாக உள்ளது. பால்ரஸ் மூலம் சுடும் இந்த துப்பாக்கிகள் பறவைகளை சுடுவதற்கு பயன்படுத்துகின்றனர். குற்றவாளிகள் இந்த துப்பாக்கி மூலமும் மிரட்டுகின்றனர். மனிதர்களை சுட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த துப்பாக்கி வைத்திருப்பதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இல்லையேல், போலீஸ் அனுமதியுடன் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்த சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior