உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

போலி ஆவணம் தயாரித்து ரூ. 2.5 கோடி சொத்து விற்பனை கடலூரில் இருவர் கைது

கடலூர் :

                          போலி ஆவணம் தயாரித்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றவர் மற்றும் வாங்கிய இருவரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(54). இவர், தற்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் இன் ஜினியராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன்(57). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர், கோவையில் வசித்து வருகிறார். கடலூர் சங்கரா நாயுடு தெருவில் உள்ள இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 ஆயிரத்து 654 சதுரடி கொண்ட வீட்டில் உறவினர்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த இடத்தை, திருவண்ணாமலையை சேர்ந்த கோபாலகிருஷ் ணன் என்பவர், கடந்த 1984ம் ஆண்டு வடலூர் துணை பதிவாளர் அலுவலகத் தில் தனது மனைவி சுசிலா பெயருக்கு எழுதி வைத்தார். உடன் சுசிலா, அந்த இடத்தை திருவண் ணாமலையை சேர்ந்த காங்., பிரமுகர் ராஜேந்திரனுக்கு பவர் எழுதி கொடுத்தார்.

                         அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன், இடத்தின் உரிமையாளர்க ளான பாலாஜி, தேவநாதன் பேரில் கடலூர் சஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் ராஜேந்திரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வாய்தா வாங்கி வந்தார். அதே நேரத்தில், பிரச்னைக்குரிய இடத்தை கடலூர் வேணுகோபாலபுரத்தை சேர்ந்த சத்தியநாராயணனுக்கு "பவர்' எழுதிக் கொடுத்தார்.சத்தியநாராயணன் தனது மனைவி கீதா, மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பாபு, மதிசேகர், புனிதா மற்றும் பண்ருட்டி ரவி ஆகியோருக்கு, 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

                          இதனை அறிந்து நியாயம் கேட்ட பாலாஜி மற்றும் தேவநதானையும் கொலை செய்துவிடுவதாக சத்தியநாராயணன், மதிசேகர்,பாபு உள்ளிட்டோர் மிரட்டினர். இதைத்தொடர்ந்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்களின் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கடந்த டிசம் பர் 19ம் தேதி உத்தரவிட்டார். இதன் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் ரத்தினவேல், ஏட்டுகள் பழமலை, ராஜேந்திரன், தனபால் மற்றும் போலீசார் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், உரிமம் இல்லாத சொத்தை விற் பனை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் சத்தியநாராயணன்(40), பாபு (38) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior