உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் 'பாயின்ட் டூ பாயின்ட்' ரயில் இயக்க எதிர்பார்ப்பு

சிதம்பரம் :

                     விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை தயாராகிவிட்ட நிலையில், கட்டடப் பணிகளுக்கு காத்திருக்காமல், "பாயின்ட் டூ பாயின்ட்' (இடைநில்லா) பயணிகள் ரயில் இயக்கினால் மக்களின் நீண்ட கால அவதிக்கு தீர்வு ஏற்படும்.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் முழுமை பெற் றுள்ளன. ரயில்வே பொது மேலாளர் (முன்னாள்) ஜெயந்த், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

                   கடந்த 5ம் தேதி முதல் இப்பாதையில் 15 முறை சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.சேந்தனூர், திருத்துறையூர், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், வரக்கால்பட்டு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், கேப்பர்குவாரி, ஆலப்பாக்கம், புதுச் சத்திரம், பரங்கிப் பேட்டை, கிள்ளை, சிதம்பரம், வல்லம்படுகை, கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், ஆனந்ததாண்டவபுரம், நீடூர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை, பிளாட்பாரம், ஷெட்டர், நடைமேடை, மின் விளக்கு அமைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.

                       ரயில்வே தொலைபேசி இணைப்பு இல்லை. இப்பணிகள் முழுமைபெற குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் பிடிக்கும். அதுவரை காத்திருக்காமல், முதற்கட்டமாக ரயில்வே தொலைபேசி இணைப்பு மற்றும் சிக்னல் பணிகளை முடித்து, விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே, "பாயின்ட் டூ பாயின்ட்' (இடைநில்லா) பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும்.இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்வம் காட்டாத மக்கள் பிரதிநிதிகள்

                  திருச்செந்தூர் - திருநெல்வேலியில் 60 கி.மீ., தூரம் பணியை ஆறு மாதத்தில் முடித்து தற்போது அங்கு கூடுதலாக பயணிகள் ரயில் கள் இயக்கப்படுகின் றன. அங்குள்ள மக் கள் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் செலுத்தி படுவேகமாக பணியை முடித்தனர்.ஆனால் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் பிரநிதிகளாகிய எம்.பி.,க்கள், எம்.எல். ஏ.,க் கள், சேர்மன் என ஒருவரும் ரயில்வே பணியை பார்வையிட்டு துரிதப்படுத்தவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior