உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

கிள்ளை :

                    சிதம்பரம் அருகே கிள்ளையில் ஐ.என்.டி.பி., தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.சிதம்பரம் அருகே கிள்ளை ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கவுன்சிலர் கற்பனைசெல்வம் தலைமை தாங்கினார். வினோபா வரவேற்றார். ஐ.என்.டி.பி., நிறுவன விவசாய ஒருங்கிணைப்பாளர் தீப்பாஞ்சான், மீனவ நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, இன்ஜினியர் அரவிந்தன், ராஜாராமன் முன்னிலை வகித்தனர்.

                இயற்கை விவசாயமும், எதிர்கால வாழ்வும் என்ற தலைப்பில் திண்டுக்கல் மண்டல ஐ.என்.டி.பி., ஒருங்கிணைப்பாளர்கள் விக்டர், குமார் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், தைக்கால் டிரஸ்டி முத்தவல்லி சர்த்தார் சக்காய் நோக்கவுரையாற்றினர். ஊராட்சித் தலைவர்கள் குலசேகர், தனசேகரன்,மோகன்தாஸ் முன்னோடி விவசாயிகள் முகம்மது ஜக்கரியா, இதயதுல்லா, மதிவாணன், மெய்ஞானகுரு ஆகியோர் நவீன வளாண்மை ஓர் ஆய்வு மற்றும் மாற்று செயல்முறை வடிவம் குறித்து விவாதம் நடத்தினர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். விழிகள் கலைக்குழு சார்பில் விவசாயத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior