உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

பண்ருட்டி ரயில்வே கேட் சிக்னல் பழுது: சரக்கு ரயில் நிறுத்தம்

பண்ருட்டி :

                     பண்ருட்டி ரயில்வே கேட் சிக் னல் இயங்காததால், விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், நேற்று தஞ்சாவூரில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு ரயில், அரை மணி நேரம் நின்றது. கேட் மூடப்பட்டிருந்ததால், சென்னை - கும்பகோணம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

                         விழுப்புரம் - மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் அகல பாதை பணி முடிந்ததையொட்டி, 15 முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டன. நேற்று தஞ்சாவூரில் இருந்து சென் னைக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் புறப்பட்டது. பகல் 12 மணிக்கு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனக்கு வந்தது. விழுப்புரம் செல்வதற்காக, ஸ்டேஷன் அருகே உள்ள சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டது. இருப்பினும் சிக்னல் விழாததால் ரயில், ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ரயில்வே கேட் வெகு நேரமாக மூடப்பட்டிருந்ததால் பண்ருட்டி - சென்னை சாலையில், போக்குவரத்து ஸ்தம்பித்தது. சிக்னல் இயங்காதது குறித்து, ஸ்டேஷனில் இருந்து வந்த தகவலை தொடர்ந்து, கேட் கீப்பர் 12.20 மணிக்கு கேட்டை திறந்து விட்டார். 12.30 மணிக்கு சாலை போக்குவரத்து சீரானது. பகல் ஒரு மணிக்கு மீண்டும் ரயில்வே கேட் மூடப்பட்டு, சிக்னல் இன்றி ரயில், விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior