உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

மாவட்டத்தில் காணும் பொங்கல் கோலாகலம்

விருத்தாசலம் :

                      விருத்தாசலம் மணிமுக்தாற்றில் காணும் பொங்கல் விழா குதூகலமாக கொண்டாடப்பட்டது. காணும்  பொங்கலையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில் உள்ளிட்ட  கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தன. காலை முதல் பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் கும்மி அடித்து, கபாடி, கோகோ விளையாட்டுகளை விளையாடினர். பண்ருட்டி அடுத்த மணம் தவிழ்ந்தபுத்தூர் சக்தி விநாயகர் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது.

                 பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் மங்காதோப்பு  சக்திவிநாயகர் கோவிலில் நேற்று காணும் பொங்கல் திருவிழா நடந்தது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்து மூலவர் விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு உறி அடித் தல், வழுக்குமரம் ஏறுதல், பாரிவேட்டை நடந்தது. இரவு உற்சவர் சக்திவிநாயகர் வீதியுலா நடந்தது. விழாவில் மணம்தவிழ்ந்தபுத்தூர், ஒறையூர், பொன் னங்குப்பம், சேமக்கோட்டை, புதுப் பேட்டை, ஆவியனூர், ஆனத்தூர் உள் ளிட்ட 30 கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும்  விழா குழுவினர் செய்திருந்தனர். திட்டக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமப்புற மக்கள் வியாபார ரீதியாக கடந்த ஒரு வாரமாக திட்டக்குடியில் முகாமிட்டனர்.

                       பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன. நேற்று காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு திட்டக்குடி வெள்ளாற்றில் ஏராளமான பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள், இளைஞர்கள் மாலை 3 மணி முதலே வர துவங்கினர். பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் வெள்ளாற்றில் குவிந்தனர். புதுமண தம்பதியினர் திருமண மாலைகள், கயறுகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, வயதான சுமங்கலி பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பல ஆயிரக் கணக்கானோர் வெள்ளாற்றில் விந்ததால் திட்டக்குடி வெள்ளாறு விழாக்கோலம் பூண்டிருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior