ஸ்ரீமுஷ்ணம் :
கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங் கல் விழா கொண்டாடப் பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்பாக நடந்த விழாவில் ஜெயந்தி பத்மநாபா, சி.எஸ். ஜெயின், த.வீ.செ. மற்றும் எஸ்.பி.ஜி., கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இதில் அறங்காவலர் குழு தலைவர் செல்வக்குமார் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சவுந்திரராஜன், செந்தில்நாதன், மகாவீர்சந்த், பிரகாஷ் உள் ளிட்டோர் பங்கேற்றனர். த.வீ.செ., பள்ளியில் நடந்த விழாவில் செயலர் செந்தில்நாதன், தலைமை ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் சாலைமீனா, பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீதாலட்சுமி ஆதிவராகன் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநத்தம்:
கண்டமத்தான் ஊராட்சி சார்பில் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பாலசுந்தரம், ஆசிரியர்கள் விஜயபாஸ்கர், செங்குட்டுவன் கலந்து கொண்டனர். ஆலப்பாக்கம்: நடுநிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு தலைமையாசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியர் அண்ணாதுரை, ஜானகிராமன், கல் யாணசுந்தரமூர்த்தி, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்:
ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மின் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட் டது. மன்ற ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ஞானகுமார், புலவர் அருள்பிரகாசம், மன்ற தலைவர் லஷ்மணன், பொருளாளர் பர்வதவர்த்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பண்ருட்டி: கோட்லாம் பாக்கம் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பாலசுப்ரமணியன் முன் னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக