உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

மணல் எடுக்க அனுமதி கோரி எம்.எல்.ஏ.,விடம் மனு

நெல்லிக்குப்பம் :

       பெண்ணையாற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்க கோரி மாட்டு வண் டிக்காரர்கள் எம்.எல். ஏ., விடம் மனு கொடுத்தனர். 

இதுகுறித்து நெல்லிக் குப்பம் பகுதி மாட்டு வண்டிக்காரர்கள் எம்.எல். ஏ., சபா ராஜேந்திரனிடம் கொடுத்துள்ள மனு: 

                   நெல்லிக்குப்பத்தில் வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் மணல் எடுத்து விற்று வந்தோம். 6 மாதத்திற்கு முன் ஆற்றில் மணல் எடுக்கும் வண்டிகளுக்கு 47 ரூபாய் கனிம வளத்துறை மூலம் வசூலிக்கப்பட்டது. பின்னர் வசூல் நிறுத்தப் பட்டது. தொடர்ந்து ஆற்றில் மணல் எடுத்து வந்தோம். கடந்த மாதம் மணல் ஏற்றி வந்த வண்டிகளை தாசில்தார் பிடித்து அபராதம் விதித்தார்.

                மணல் ஏற்றி விற்பனை செய்தால் தான் மாட்டுக்கு தீவனம் வாங்க முடியும், எங்கள் குடும்பத்தினர் சாப்பிட முடியும். வண்டிக்கு கட்டணம் வசூல் செய்தால் வாங்க தயார் என கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வண்டிகளில் மணல் எடுக்காததால் நகரில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., ஆற்றில் மணல் எடுக்க அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior