உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

ஆற்றுத் திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி: பல்லாயிரக்கணக்கா மக்கள் பங்கேற்பு

கடலூர் :

                     கடலூர் மற்றும் கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் சாமிகளுக்கு நடந்த தீர்த்தவாரியை பல் லாயிரக்கணக்கான பக்தர் கள் தரிசனம் செய்தனர். பொங்கல் முடிந்த ஐந்தாம் நாள் ஆற்று திருவிழா நேற்று கடலூர் மற் றும் கண்டரக் கோட்டை பெண்ணையாறு மற்றும் பண்ருட்டி கெடிலம் ஆற் றில் கோலாகலமாக நடந் தது. அதனையொட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகள் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆற் றில் தீர்த்தவாரி நடத்தி தீபாராதனை நடத்தப்பட்டது.

                             கடலூர் பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரியில் புருகீஸ்பேட்டை சுப்ரமணியர், சாலைக் கரை முத்துமாரியம்மன், உச்சிமேடு ஏழைமுத்துமாரியம்மன், குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன், தாழங்குடா மாரியம்மன், வரக்கால்பட்டு ஓடை மாரியம்மன், சின்ன கங்கணாங்குப்பம் மாரியம் மன், வில்வநகர் சுப்பரமணிய சாமி, கண்டக்காடு முத்துமாரியம்மன், நாணமேடு மாரியம்மன், பெரியக்காட்டுப்பாளையம் எல்லையம்மன், முத்துமாரியம்மன், புதுப்பாளையம் துர்கையம்மன், புதுச்சேரி மாநிலம் பெரிய கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் முத்துமாரியம்மன், பிள்ளையார்குப்பம் சுப்ரமணியர் சாமி, கிருமாம்பாக்கம் சோலைவாழி சாமி, நாகப்பனூர் முத்துமாரியம்மன், பெரிய ஆராய்ச் சிக்குப்பம் முத்துமாரியம் மன், கும்தாமேடு மாரியம்மன், கரிக்கன் நகர் முத்துமாரியம்மன் உட் பட 30க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து சாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த் தவாரியில் பங்கேற் றன.

பண்ருட்டி : 

                கண்டரக் கோட்டை  பெண்ணையாற்று திருவிழாவிற்கு பெரியகள்ளிப் பட்டு மாரியம்மன், ஏரிப் பாளையம் அரசியம்மன், கட்டமுத்துப்பாளையம் சுப்ரமணிய சுவாமி, மாரியம்மன், விநாயகர், எல்.என்.புரம் முத்துமாரியம்மன், தட்டாம்பாளையம் மாரியம்மன், ஆனாங் கூர் மாரியம்மன், சிறுவந் தாடு மாரியம்மன்  உள் ளிட்ட பல்வேறு கிராமங் களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன. பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நடந்த விழாவிற்கு பண்ருட்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.

                   பல்வேறு கோவில்களில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சாமிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த தீர்த்தவாரிகளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழா கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ராட்டினம் உள் ளிட்ட பொழுது போக்கு அம்சங் களும் இடம் பெற் றிருந்தன. சிறுவள்ளிக் கிழங்கு விற் பனை அமோகமாக நடந் தது.

                ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூரில் டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலும், கண்டரக்கோட்டையில் டி.எஸ். பி., சிராஜிதின் தலைமையிலும், பண்ருட்டி கெடிலம் ஆற்றில் இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 200க்கும் மேற் பட்ட போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு, கண்டரக் கோட்டை பெண்ணையாறு, பண்ருட்டி பெண் ணையாறுகளுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன. மக்கள் அவதி: நெல்லிக் குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றுத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.   ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. ஆற்றில் குடிநீர் வசதி இருக்குமென நம்பி வந்த மக்கள் ஏமாற்றம் அடைந் தனர். நகராட்சி நிர்வாகம் ஆற்றுக்கு வரும் வாகனங் கள் மற்றும் கடைகளில் கட்டணம் வசூல் செய்ய குத்தகை விட்டு பணம் பெறுகின்றனர். ஆற்றில் குடிநீர் வசதி செய்து தராததால் மக்கள் சிரமப் பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior