உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

ஜெ.,வை முதல்வராக்க பாடுபடுங்கள் : கட்சியினருக்கு மாஜி அமைச்சர் உத்தரவு

நெல்லிக்குப்பம் :

                        அடுத்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் ஜெ., முதல்வராக ஒற்றுமையுடன் பாடுபட வேண்டுமென மாவட்ட செயலாளர் சம்பத் பேசினார். நெல்லிக்குப்பம் நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந் தது. ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சவுந்தர் முன் னிலை வகித்தார். துணை செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சம்பத், பேச் சாளர் மோகனன் சிறப் புரை ஆற்றினார். காசிநாதன், ரங்கராஜன், சாந்தி, சேகர், பாரி, விஜயலட்சுமி, கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சம்பத் பேசியதாவது : கருணாநிதி அரசு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இப்பணத்தில் தொழிற்சாலைகள் துவங்கவில்லை. 21 லட்சம் வீடுகள் கட்டித்தர போவதாக அறிவித்துள்ளனர்.  இதற்கு தேவையான 12 ஆயிரத்து 600 கோடியை எங்கு கடன் வாங்க போகிறார். இப்போது உள்ள கடனே ஒரு தனி நபருக்கு 15 ஆயிரம் உள்ளது. கடன் வாங்கி இலவசம் வழங் கவே பயன்படுத்துகிறார். தொலைநோக்கு பார்வையோடு தொழிற்சாலைகள் அமைத்து வேலை வழங்கியிருந்தால் அவர்களே வீடு கட்டி கொள்ள முடியும். மத்திய அமைச்சர் அழகிரி மொழி பிரச்னையால் பாராளுமன்றத்துக்கு செல்வதே இல்லை. ஒரு குடும்பம் வளர மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. தொலைநோக்கு பார்வையில் வளர்ச்சி திட்டங்கள் இல்லாத கருணாநிதி அரசு தூக்கியெறியப்பட வேண்டும். தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வரும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் ஜெ., முதல்வராக ஒற்றுமையாக பாடுபடுவோம் என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior