நெல்லிக்குப்பம் :
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை சல்பர் தொட்டியில் விழுந்த ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். கடலூர் மாவட்டம் வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (35). நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை ஆலையில் உள்ள சல்பர் தொட்டியை சுத்தம் செய்ய கழிவுநீர் வெளியேறும் குழாயை திறந்து சல்பரை வெளியேற்றினார். தொட்டியில் சிறிதளவு சல்பர் இருந்த போதே புவனேஸ்வரன் சுத்தம் செய்ய இறங்கினார். அப்போது விஷ வாயு வெளியேறியதால் மூச்சு திணறி புவனேஸ்வரன் உள்ளே விழுந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலா ளர்கள் புவனேஸ்வரனை காப் பாற்ற முயன்றனர். அவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற் பட்டதால் ஒருமணி நேரத் துக்கு பிறகு உடல் முழுவதும் வெந்து போன நிலையில் இறந்து கிடந்த புவனேஸ்வரன் உடலை மீட்டனர். இறந்த புவனேஸ்வரனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புவனேஸ்வரன் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் ஆலை நிர்வாகம் நிவாரணமாக வழங்க வேண்டும் என சேர்மன் கெய்க்வாட் பாபு, தொழிற் சங்க தலைவர் வேலாயுதம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் ஆலை துணைத் தலைவர் முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். புவனேஸ்வரன் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை இல்லாமல், மூன்று லட்சம் ரூபாய், உடல் அடக்க செலவுகளை வழங்க ஆலை நிர்வாகத்தினர் சம்மதித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக