கடலூர் :
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு இறந்ததையொட்டி கடலூர், சிதம்பரம், பண்ருட்டியில் இரங்கல் ஊர்வலம் நடந்தது.மா.கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு நேற்று முன்தினம் இறந்தார். கடலூர் மா.கம்யூ., அலுவலகத்தில் அவரது உருவபடத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மா.கம்யூ., மாநில குழு தனசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்புராயன், தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பன், காங்., மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயபால், முருகன், நகர தலைவர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் சேர்மன் தங்கராசு, கவுன்சிலர் கோவலன், காங்., மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம்பத், நகர செயலாளர் குமார், மாவட்டத் துணை செயலாளர் முருகுமணி, பானுமதி, பா.ம.க., மாநில துணைத் தலைவர் சண்முகம், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், வட்ட செயலாளர் சம்மந்தம், ம.தி. மு.க., இலக்கிய அணி செயலாளர் மன்றவாணன், கவுன்சிலர் ராஜா, பா.ஜ., வெங்கடேசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்:
காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் நடராஜன், இந்திய கம்யூ., நகர செயலாளர் சேகர், அ.தி.மு.க., நகர செயலாளர் தோப்பு சுந்தர், முன்னாள் சேர்மன் குமார், இளைஞரணி ஜவகர், கவுன்சிலர்கள் சிவராமதீட்சிதர், மணிவேல், ஜெயவேல் மற்றும் யாதவ சேனா தலைவர் இளங்கோ யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பண்ருட்டி:
அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் பச்சையப்பன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக் கொழுந்து, ம.தி.மு.க., நகர செயலாளர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர் சோழன், துரை, உதயகுமார், தட்சணாமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் :
கட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் நேருஜி ரோடு வழியாக ரயிலடியை சென் றடைந்தது. அங்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி கூட்டம் நடந்தது. ஊர்வலத்திற்கு மாநில குழு உறுப்பினர் ராம மூர்த்தி தலைமை தாங் கினார். மாவட்ட செய லாளர் ஆனந்தன் ஊர்வ லத்தை துவக்கி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக