உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

லால்பேட்டை ஊரக மருந்தகம் மூடல் : ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :

                   லால்பேட்டையில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக மருந்தகம் மூடப்பட்டதால் ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த லால் பேட்டை தெற்குதோப்பில் கடந்த 1982ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை சார்பில் ஊரக மருந்தகம் துவங்கப்பட் டது.  ஒரு டாக்டர் உட்பட 7 பேர் பணியாற்றி வந்தனர். இந்த மருந்தகத்தில் லால்பேட்டை, கொளக்குடி, கொள்ளுமேடு, கொல்லிமலை, மேல்பாதி, கீழ் பாதி, திருநாரையூர், வீரநத்தம், நெய்வாசல் கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.இங்கு இறுதியாக பணியாற்றிய டாக் டர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

                       அதனை தொடர்ந்து அங்கு பணியாற்றிய மருந்தாளுனர் மற்றும் ஊழியர்களும் இடமாறுதலாகி சென்றதால் கடந்த அக்டோபர் மாதம் ஊரக மருந்தகம் மூடப்பட்டது. அதன்பிறகு இந்த மருந்தகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுற்று வட்டார மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மூடப்பட்டுள்ள மருந்தகத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி திறக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior