சிதம்பரம்:
தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி. 26) நடைபெறுகிறது என நகராட்சி ஆணையர் பா. ஜான்சன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகராட்சி சார்பில் நடைபெறும் இம்முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய், கண்,காது, மூக்கு தொண்டை, தோல் மருத்துவம், குடல்நோய், குழந்தைகள் நலம், பெண்கள் மகப்பேறு மருத்துவம் ஆகியவற்றுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீர், சளி, ரத்தப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக