நெய்வேலி:
என்எல்சி நிறுவனத்தின் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் பெண்களின் பணி சிறப்பாக உள்ளது. நிறுவன வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம். எனவே பெண்கள் நிறுவன வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என நெய்வேலியில் புதுப்பிக்கப்பட்ட காவிரி மாதர் சங்க கட்டட திறப்பு விழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வியாழக்கிழமை கூறினார். நெய்வேலி வட்டம் 26-ல் கடந்த 48 ஆண்டுகளாக இயங்கி வருவது காவிரி மாதர் சங்கம். இச்சங்கத்தின் தற்போதைய தலைவியாக என்எல்சி நிறுவனத் தலைவரின் மனைவி கிஷ்வர்சுல்தான் அன்சாரி உள்ளார். பழமை வாய்ந்த இக்கட்டடத்தை என்எல்சி நகர நிர்வாகம் புதுப்பித்துóள்ளது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட சங்கக் கட்டட வளாகத்தை நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி திறந்து வைத்துப் பேசியது: உலக அளவில் இந்தியாவில் தான் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிக அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளதை எண்ணி பெருமைப்படுகிறேன். ஒரு குடும்பம் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல விஷயங்களில் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. பெண்களின் பங்களிப்பு வெறும் ஏட்டளவில் இல்லாமல் அவை செயல் வடிவம் பெறும்போது தான் அதன் பயன் எந்த அளவுக்கு உன்னதமானது என்பதை நாம் அறிய முடியும் என்றார் அன்சாரி. விழாவில் கிஷ்வர் சுல்தான் அன்சாரி தலைமை வகித்தார். சொர்ணா சுரேந்திரமோகன் முன்னிலை வகித்தார். செயலர் தனலட்சுமி வரவேற்றார். நிறுவன இயக்குநர் சுரேந்திரமோகன், செயல் இயக்குநர்கள் சிவஞானம், பெருமாள்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக