உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு : அ.தி.மு.க., ஆதரவோடு தீர்மானம்

பண்ருட்டி : 

                பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில்  தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப் பால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன் நேற்று தீர்மானம் நிறைவேறியது. பண்ருட்டி நகரமன்ற இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். கமிஷனர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
 
                 கூட்டத்தில் சேர்மன், துணை சேர்மன் உள்ளிட்ட 33 கவுன்சிலரில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் ஆளும் தி.மு.க., கவுன்சிலர்கள் லட்சுமி, வைத்தியலிங்கம், பூங்குழலி, காங்., கவுன்சிலர் சித்ரா, துணை சேர்மன் கோதண்டபாணி ஆகியோரும்,  அ.தி.மு.க., வை சேர்ந்த கமலக்கண்ணன், தனபால், ரமேஷ், ரமாதேவி, சரஸ்வதி, சண்முகம் உள்ளிட்ட ஒன்பது கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் நடந்த கூட் டத்தில்   துணை சேர்மன் கோதண்டபாணி பேசும் போது, எனது வார்டில் விளையாட்டரங்கம், சத்துணவுக் கூடம், சமுதாயக்கூடம் கட்டி 3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது.  சுகாதார பணிகள் எப்போது மேற்கொள்வது. எப்போது கேட்டாலும் மாறி மாறி பதில் கூறி வருகிறீர்கள் என்றார். அதற்கு பதிலளித்த கமிஷனர் உமாமகேஸ்வரி விளையாட்டரங்கம் மரத் திலான கீழ்தளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அடுத்த வாரம் திறப்பு விழா முடிவு செய்யப்படும் என்றார். இனி பேச உறுப்பினர்கள் இல்லாததால் தீர்மானம் நிறைவேற் றப்படுகிறது என்றார் சேர் மன்.  அப்போது மன்றத்தில் தி.மு.க., உறுப்பினர்கள் 3 பேரும், காங்., உறுப்பினர்கள் 2 பேரும், அ.தி. மு.க., உறுப்பினர்கள் 9 பேர் இருந்தனர்.

10 நிமிடத்தில் முடிந்த நகரமன்றக் கூட்டம் : 

                   கவுன்சிலர்கள் கூட்டம் 11.30க்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் 12.35க்கு துவங்கி  12.45க்கு 10 நிமிடங்களில் முடிந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன் சேர்மன் அறையில் நடந்த ஒத்திகை கூட்டத்தில்  தி.மு.க., கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், பழனி, தட்சணாமூர்த்தி, ஆனந்தி உள்ளிட்டோர் பேசும்போது சேர் மனுக்கும் கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்ட 5 பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior