திட்டக்குடி :
திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் முன்பாக சிவனடியார்கள் அறிவித்த சாகும்வரை உண் ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட் டது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் நேற்று காலை 11.30க்கு கூட்டம் துவங்கியது. இதில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் சிவனடியார்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் திருக்குள ஆக்கிரமிப்பா ளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் டி.எஸ். பி., இளங்கோ அறிவுரையின்படி, ஆக்கிரமிப் பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை குளத்திற்குள் விடாமல் இருக்க, பேரூராட்சி சார்பில் 15 நாட்களுக்குள் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மார்ச் 15க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் கழிவுநீரினை வடிகாலில் செல்ல தாங்களாகவே உரிய பணியினை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் திருக்குளம் இருப்பதால் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட் டது. இதனையேற்ற சிவனடியார்கள் கோவில் முன்பாக அறிவித்திருந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.வைத்தியநாத சுவாமி கோவில் முன் பாக சிவனடியார்கள் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட் டது.திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் நேற்று காலை 11.30க்கு கூட்டம் துவங்கியது. இதில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் சிவனடியார்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் திருக்குள ஆக்கிரமிப்பா ளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.
இருப்பினும் டி.எஸ். பி., இளங்கோ அறிவுரையின்படி, ஆக்கிரமிப்பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை குளத்திற்குள் விடாமல் இருக்க, பேரூராட்சி சார்பில் 15 நாட்களுக்குள் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மார்ச் 15க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் கழிவுநீரினை வடிகாலில் செல்ல தாங்களாகவே உரிய பணியினை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் திருக்குளம் இருப்பதால் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதனையேற்ற சிவனடியார்கள் கோவில் முன்பாக அறிவித்திருந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக