உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

அமைச்சர்கள் யாரும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை: எம்.சி., சம்பத்

பண்ருட்டி : 

             தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் யாரும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என எம்.சி. சம்பத் பேசினார்.

பண்ருட்டியில் நடந்த ஜெ.,பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்  மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.சி.சம்பத் பேசியதாவது :-  

                   அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது.  ஆனால்  கருணாநிதி ஆட்சியில் கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. ஜெ., ஆட்சியில் அமைச்சர்கள் ஜெ., வின் கட்டுக்குள் இருந்தனர். அதனால் தவறுகள் நடைபெறவில்லை.  தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் யாரும் முதல்வரின் கட்டுபாட்டில் இல்லை. சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் சூர்யா கல்லூரி,  காட்டுமன்னார்குடியில் எம்.ஆர்.கே.கல்லூரி என அமைச்சர்களுக்கு  கடந்த சில ஆண்டுகளில் எப்படி பல கோடி அளவில் பணம் வந்தது.வீரபாண்டி ஆறுமுகம், நேரு,வேலு, உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சொத்துகுவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி மகன் பெயரில் கனிமவளத்துறையின் செம்மண் (லாட்ரேட்) லைசென்ஸ் உள்ளது. கனிமவளத்துறை அமைச்சராக உள்ளவரின்  மகன் பெயரில் லைசென்சு வழங்கியது குற்றமல்லவா? சில கோடிகள் கொடுத்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை கேடிகள் விலை கொடுத்து வாங்குகின்றனர். "டிவி', காஸ் கொடுத்து பார்த்தும் பயனில்லை அடுத்தகட்டமாக அ.தி.மு.க., வினரை  விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என தி.மு.க.,வினர் இறங்கியுள்ளனர். ஜெ., பிறந்த நாளில் அ.தி.மு.க., ஆட்சியைக் கொண்டுவர கட்சி தொண்டர்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் சம்பத் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior