உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு

கடலூர் : 

               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று மோட்டார் டிராலியில் ஆய்வு செய்கிறார். விழுப்புரம் - மயிலாடுதுறை 122 கி.மீ., ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 2006ம் ஆண்டு துவங்கி மூன்று கட்டங்களாக நடந்தது. பணிகள் முடிவடைந்து இரண்டு மாதங் களாக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்., நாயுடு இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம் தேதி) இரு நாட்களுக்கு விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் மோட்டார் டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொள்கிறார். மயிலாடுதுறையில் இன்று காலை 9 மணிக்கு  ஆய்வு பயணத்தை துவங் குகிறார். ஆய்வு பணிகள் முடிந்து பாதுகாப்பு ஆணையர் தரச் சான்று வழங்கியவுடன் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior