உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 26, 2010

ரேஷன் கடை முற்றுகை

சிதம்பரம்:
 
              சிதம்பரத்தில் பொருள்கள் சரியாக வழங்கப்படாத ரேஷன் கடையை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் வி.எஸ்.ஆர். நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் சரியாக வழங்கப்படாததையும், ரேஷன் கார்டுக்கு ரூ.2 வசூலிப்பதை கண்டித்தும், 300 ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் அப்பகுதி மக்கள் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜி.மாரியப்பன் தலைமையில் ரேஷன் கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் காட்டுமன்னார்கோவில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புகழேந்தி, குடிமைப் பொருள் வழங்குதுறை வட்டாட்சியர் மூர்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் வாபஸ் பெறப்பட்டது. வி.எஸ்.ஆர். நகர ரேஷன் கடை வாரத்துக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும்தான் திறக்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரரிடம் கடை வாடகை என்ற பெயரில் ரூ.2 வசூலிக்கப்படுகிறது. இந்த கடைக்குட்பட்ட வி.எஸ்.ஆர்.நகர், பெரம்பராயர் கோயில் தெரு, வேலவன்நகர், வைகைநகர், தொழிலாளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 800 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 300 கார்டுகள் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 21.1.2010-ல் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை என்பதால் மறியலில் ஈடுபட்டோம் என ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜி.மாரியப்பன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior