பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சி சேர்மன் பச்சையப்பனின் தன்னிச்சையான செயலை கண்டித்து 10 தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தோம் என தி.மு.க., கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பண்ருட்டி நகராட்சி 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை பண்ருட்டியில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் 4 பேர் காலை 10 மணிக்கு நகராட்சி சேர்மன் பச்சையப்பனை சந்தித்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டது மட்டுமல்லாமல் மாதாந்திர கூட்டத்திற்கு வராத 6 அ.திமு.க., கவுன்சிலர்கள் கையொப் பத்தை வருகை பதிவேட்டில் பதிவு செய்து மாதாந்திர அமர்வு படியும் பெற்று சென்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்மன் ஒப்புதலோடு நடந்த இந்த செயலை கண்டித்தும், எங்கள் வார்டுகளில் பணிகள் நிறைய செய்ய வேண்டிய நிலையில் அதிகபடியாக சுடுகாட்டுக்கு செலவு செய்கிறீர்களே என கேட்டதற்கு, நான் அவ்வாறு தான் செய்வேன் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என அலட்சியமாகவும், ஆவேசமாகவும் கூறியதை கேட்ட நானும் மற்ற தி.மு.க., கவுன்சிலர்களும் நகராட்சி சேர்மனின் தன்னிச்சையான செயலை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் 10 பேர் கூட்டத்தை புறக்கணிப்பு செய்தோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக