உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

திட்டக்குடி வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்பணைக்கு ரூ.233 கோடி அனுமதி


திட்டக்குடி : 

            வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளத் தடுப்பணை அமைத்திட 233 கோடி ரூபாய், உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இதில், வலுவிழந்த கரைப் பகுதியான 1,700 முதல் 2,500 மீட்டர் வரையிலான 800 மீட்டர் கரைப் பகுதியை சீரமைத்து, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இப்பணிகளை நேற்று மதியம் நேரில் பார்வையிட்ட வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன், கூறியதாவது: 

                   வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை நீரை வீணடிக்காமல் இந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு செய்யப்படும். வெள்ளாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்திட 233 கோடி ரூபாய், உலக வங்கி நிதியிலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கி, 2012 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். இவ்வாறு நஞ்சன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior