சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய புதிய வகை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
மேலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர் பெற்றுள்ள மதிப்பெண்ணுக்கேற்ப கிரெடிட் புள்ளிகள், கிரேடு புள்ளிகள், கிரேடுகள் ஆகியவையும் சான்றிதழில் இடம் பெறுகின்றன. அதன்படி, 50-59 மதிப்பெண்ணுக்கு 5.0-5.9 கிரேடு புள்ளியும், ஆ கிரேடும், ஆவரேஜ் என்றும் குறிப்பிடப்படும்.60-69 மதிப்பெண்ணுக்கு 6.0-6.9 கிரேடு புள்ளிகளும், அ கிரேடும், குட் என்றும் குறிப்பிடப்படும்.70-74 வரை மதிப்பெண்ணுக்கு அ+ கிரேடும், வெரி குட் என்றும், 75-79 வரையுள்ளவற்றுக்கு ஈ கிரேடும் டிஸ்டின்க்ஷன் என்றும், 80-89 வரையிலான மதிப்பெண்ணுக்கு ஈ+ கிரேடும், எக்ùஸலென்ட் என்றும், 90-100 வரையுள்ள மதிப்பெண்ணுக்கு 9.0-10 கிரேடு புள்ளிகளும், ஞ கிரேடும் அவுட்ஸ்டாண்டிங் என்றும் சான்றிதழில் குறிப்பிடப்படும்.
பல்கலைக்கழகம், அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் 2009-10-ம் ஆண்டில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகத்தின் 2009 நவம்பர் பருவத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளன.தற்போது பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் 2010 பருவத் தேர்வு முடிந்து, அதன் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கும், 2009 நவம்பர் தேர்வுக்கும் சேர்த்து புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னும் 10 நாள்களுக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள எல்லா கலை அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த 2008-09-ம் கல்வி ஆண்டில் இருந்து விருப்பார்ந்த தெரிவுமுறை பாடத் திட்டம் (சி.பி.சி.எஸ்.) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழக்கமான தமிழ், ஆங்கிலம், துணை பாடங்கள், முதன்மை பாடங்கள் ஆகியவற்றோடு விருப்பப் பாடங்கள், சாப்ட் ஸ்கில்ஸ் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன.இவ்வாறு சேர்க்கப்பட்ட பாடங்களில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை எடுத்து தேர்ச்சி பெற்றால்தான் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதாகக் கருதி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்படும்.
2008-09ம் ஆண்டிலேயே சி.பி.சி.எஸ். திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் கிரெடிட் மட்டுமே இடம் பெற்றிருந்தன. கிரேடு புள்ளிகள், கிரேடு, குட் என்பன போன்ற குறிப்புகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மேல்படிப்புக்குச் செல்வது, வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பணிக்குச் செல்வது ஆகியவற்றுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கலை கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை செயல்படுத்தப்படுவதால் பாரதிதாசன், பாரதியார் போன்ற பல்கலைக்கழகங்களிலும் சென்னை பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழின் மாதிரிதான் பயன்படுத்தப்படவுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக