கடலூர் :
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள் ளதை பயன்படுத்திக் கொண்டு பெயர் சேர்க்குமாறு அமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் 1.7.2010 அன்று வெளியிட்டுள்ளது. புதிய வாக்காளர் கள் சேர்த்தல், நீக்குதல் பணிகள் கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. தற்போது தேர்தல் ஆணையம் வரும் 26ம் தேதி நீட்டித்துள்ளது. எனவே பெயர் இல்லாதவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுத்து பெயரினை சேர்த்துக் கொள்ளவும். படிவம் 7ல் பெயர் நீக்குவதற்கும், படிவம் 8ல் பெயர் திருத்தம், புகைப் படம் மாற்றம் போன்ற இனங்களில் பூர்த்தி செய்து கொடுக்கவும்.
ஆகவே 1.1.2010 அன்று 18 வயது நிரம்பியவர்கள் முன்பு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதியதாக குடிவந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற் கும், வேறு இடங்களுக்கு சென்றவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கும் படிவங்களை பூர்த்தி செய்து பொதுத் தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடி மையங்களின் களப்பணியாளர்கள் மற்றும் தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை கொடுக்கலாம். இப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் தவறாமல் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக