பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், கடந்த மாதம் நடந்த உடனடித் தேர்வில் கலந்து கொண்டனர்.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள், ஓரிரு நாளில் முடியும். எனவே, அடுத்த வாரத்தில் 30ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு உடனடித்தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக