உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

விருத்தாசலம் அருகே கொலை முயற்சி வழக்கு: விவசாயிக்கு 7 ஆண்டு சிறை

விருத்தாசலம்:

            நிலத்தகராறில் கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயிக்கு விருத்தாசலம் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

            விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). அதே பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (50). இவர்கள் இருவருக்கும் நிலம் சம்பந்தமான வழக் கில் அம்மாசிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பழனிவேல், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விவசாயி அம்மாசி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2007ம் ஆண்டு பிரச்னைக் குரிய நிலத்தில் விவசாயம் செய்ய முயன்றனர்.இதனை பழனிவேல் மற்றும் அவரது தம்பிகள் வெங்கடேசன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள் ஆகியோர் தடுத்தனர்.

             இதில் ஏற்பட்ட தகராறில் அம்மாசி மற்றும் அவரது உறவினர்கள் பழனிவேல் தரப்பினரை ஆயுதங்க ளால் தாக்கினர். இதுகுறித்து மங்கலம் பேட்டை போலீசார் அம் மாசி உட்பட 9 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். வழக்கை விசாரித்த விருத் தாசலம் கூடுதல் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி மறைமணி முடியரசன், அம்மாசிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அவரது மகன் சக்திவேல், மருமகன் குணசேகரனுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறையும்,  தலா 1,000 ரூபாய் ஆயிரம் அபராதமும், பெரியசாமிக்கு 1,000 ரூபாய் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு வழங் கினார். மேலும் வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior