கடலூர்:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங் கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட் டப்படிப்பு படித்து பதிவு செய்து 30-6-2009 அன்று ஐந்து வருடங்கள் கடந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணியில் இருத்தல் கூடாது.அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண் ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.தகுதியுள்ளவர்கள் கல்விச்சான் றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடை யாள அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் மூன்று வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பம் 1-7-2010 முதல் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை வழங்கப்படுகிறது.இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பம் திருப்பி ஒப்படைக்க கடைசி நாள் 31-8-2010 ஆகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக