உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த ரூ.8.60 கோடி: 25 ஆண்டு கனவு நனவாகிறது

பரங்கிப்பேட்டை:

           பரங்கிப்பேட்டை அருகே 30 மீனவ கிராம மக்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில் அன்னங்கோவில் முகத்துவாரம் சுனாமி அவசரகால மறுகட்டமைப்பு திட்டத்தில் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக ஆழப்படுத்தப்படுகிறது.

             பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்று வழியாக கடலுக்குச் செல்ல முகத்துவாரம் உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையொட்டிய சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், கிள்ளை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை  உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க இந்த முகத்துவாரம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.  இப்பகுதியில் வாங்கப் படும் மீன் வகைகள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங் களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடக்க பேருதவியாக இருக்கும் .

                இந்த முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்து விடுவதால் கடலில் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தித் தரக்கோரி 30 கிராம மீனவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருந்தது. மீனவ கிராம மக்களின் முக்கிய பிரச்னையாக இருந்து வந்த நிலையில் ஒவ்வொரு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போதும் அன்னங்கோவில் முகத்துவாரம் நிரந்தரமாக ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சியினர் உறுதியளிப்பதோடு சரி. ஆனால், தேர்தல் முடிந் தால் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

                    முகத்துவாரம் தூர்ந்து போகும்போது படகுகள் கடலுக்குள் செல்ல முடியாததால் பரங்கிப் பேட்டை மற்றும் முடசல் ஓடை விசைப்படகு மீனவ சங்கத்தினர் படகு வைத் துள்ளவர்களிடம் பணம் வசூல் செய்து பொக் லைன் இயந்திரம் மூலம் தூர் வாரி வந்தனர். மேலோட்டமாக தூர் வாருவதால் நிரந்தர தீர்வு ஏற்படாமல் இருந்தது. இதன் காரணமாக பல நேரங்களில் அந்த வழியாகச் செல்லும் படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் இறந்து போன துயர சம்பவங்களும் நடந்ததுண்டு. ஒரு சில நேரங்களில் படகுகள் சிக்கி  சேதமடைவதும் உண்டு.30 மீனவ கிராம மக்களின் மீன் பிடி தொழிலுக்கு அன்னங்கோவில் முகத்துவாரம் முக்கியத் தடையாக இருந்து வந்தது. மீனவர்களின் இந்த பாதிப்பையும் அவர்கள்படும் துன்பங்களையும் தினமலரில் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டது.

              இந்நிலையில் சுனாமி அவசரகால மறுகட்டமைப்பு திட்டத்தில் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன் னங்கோவில் முகத்துவாரம் நிரந்தரமாக ஆழப்படுத்த முடிவு செய்யப் பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கான டெண் டர் வரும் ஆகஸ்ட் மாதம் விடுவது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் அன்னங்கோயில் முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடங்கும் என்பதால் 30 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகள் பணியை கிடப்பில் போடாமல் விரைந்து முடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior