உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

சிதம்பரம் அருகே "மனு கொடுத்து அலுத்துப் போச்சு: குடிநீர் கிடைத்த பாடில்லை"

சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி கிராமத்தில் போர்வெல் பழுதாகி கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் முதல் தமிழக முதல்வர் வரை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். 

            குமராட்சி அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தில்  250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்காக கடந்த 2006ம் ஆண்டு முதல் போராடி வரும் நிலையில் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. 

              இக் கிராமத்தில் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி போர்வெல் கடந்த 2006ம் ஆண்டு பழுதாகியதால் குடிநீர் சப்ளை நிறுத்தப் பட்டது. நிலத்தடி நீர்மட் டம் குறைந்து விட்டதால் தண்ணீர் வரவில்லை என காரணம் கூறப்பட்டது. அன்று முதல் கிராம மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.  அப்பகுதியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந் தைகள் தண்ணீருக்கு கடும் அவதிடைந்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வட் டார வளர்ச்சி அலுவலர் முதல் கலெக்டர், துணை முதல்வர், முதல்வர் வரை பல முறை மனு கொடுத்து அலுத்துப் போனதுதான் மிச்சம். பணிகள் துவங்கியபாடில்லை. 

                      620 அடி ஆழத்தில் போர்வெல் போட்டால் தண்ணீர் கிடைத்துவிடும். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என அவ்வப்போது சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கூறுவதோடு சரி. ஆனால் ஐந்து ஆண்டுகளாக கிராம மக்களின் அவதி தொடர்கிறது. குடிநீர் இல்லாத இக்கிராமத்தின் அருகே உள்ள வீராணத்தில் இருந்து சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்க தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் இந்த கிராம மக்களின் தாகத்தை தீர்க்கத்தான் இதுவரை நடவடிக்கை இல்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior