கடலூர்:
நெல்லிக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் கரும்பு ஏற்றிச் சென்ற மாட்டு வண்டி சிக்கிக் கொண்டதால், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் தாமதமாகச் சென்றது.
சென்னையில் இருந்து நெல்லிக்குப்பம், கடலூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2-40 மணிக்கு நெல்லிக்குப்பம் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ரயில்வே கேட் மூடப்படுவதை அறிந்தும், அதைக் கடந்துவிடும் என்ற எண்ணத்தில், கரும்பு ஏற்றிய மாட்டு வண்டி ஒன்று ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல முயன்றது. அதற்குள் ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டது.
இதனால் இரு ரயில்வே கேட்டுகளுக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் மாட்டுவண்டி சிக்கிக் கொண்டது.எனவே ரயில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. மாட்டு வண்டியை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, மாடு மிரண்டதால் ரயில்வே கேட் மீது மோதியதில், கேட் சேதம் அடைந்தது. இதனால் ரயிலுக்கு சிக்னல் கொடுப்பது 20 நிமிடம் தாமதம் ஆனது. அதன்பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக