உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

சிதம்பரம் அருகே மாணவியரிடம் "சில்மிஷம்" தமிழாசிரியருக்கு "தர்ம அடி"


கிள்ளை : 

            பள்ளி மாணவியரிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழாசிரியரை பொதுமக்கள் ஓட, ஓட விரட்டி தாக்கிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

             திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த மருதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (40). கடலூரில் தங்கியுள்ள இவர் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு மேல்நிலைப்  பள்ளியில், 8 மற்றும் 9ம் வகுப்பு  தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். பாட வேளையின் போது மாணவியரிடம் தவறாக பேசுவதும், சில்மிஷத்தில் ஈடுபடுவதாகவும் ஒரு சில மாணவியர் பெற்றோரிடம் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக, தலைமை ஆசிரியர் செங்குட்டுவனிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் 9ம் வகுப்பு மாணவி ஒருவரை "சில்மிஷம்' செய்துள்ளார். அவரின் அத்துமீறல் அதிகமானதால், மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

                 இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், மற்ற மாணவியரும் தங்களது பெற்றோரிடம் ஆசிரியரின் சில்மிஷம் குறித்து தெரிவித்ததால், ஆவேசமடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளி முன் திரண்டனர். பள்ளிக்கு வந்த ஆசிரியர் விஸ்வநாதனை மறித்து ஓட, ஓட விரட்டி தாக்கினர். தப்பியோடிய  ஆசிரியர் பள்ளியில் புகுந்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பள்ளியை  முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  போலீசார் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் விஸ்வநாதன் மற்றும் புகார் கூறிய மாணவியரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். 

                 கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பள்ளிக்கு நேரில் சென்று  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதனையடுத்து, ஆசிரியர் விஸ்வநாதன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior