உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் 500 பேருக்கு கொத்தனார் பயிற்சி

கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்ற வசதியாக, 500 பேருக்கு கொத்தனார் பயிற்சி அளிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             2010-11-ம் ஆண்டில் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சியில் 50 சதவீதம் அளவுக்கு கட்டுமானத் தொழில் தொடர்பான பயிற்சியை அளிக்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சிறப்புத் திட்டமான கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில், மாநில அளவில் குடிசைகளுக்குப் பதில், 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் கொத்தனார் பயிற்சி அளிக்க 2010-11-ம் ஆண்டுக்கு இலக்கு 500 பேர் என நிர்ணயித்து, |40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

             ஒரு பயிற்சியாளருக்கு, அளிக்கும் நிதி ஒதுக்கீடு |8 ஆயிரம். நிறுவனத்துக்கு பயிற்சிக் கட்டணம் ஒருவருக்கு |3 ஆயிரம். பயிற்சி பெறுவோருக்கு ஊக்கத் தொகை 45 நாள்களுக்கு |4,500. ஒருவருக்கு |500 மதிப்புள்ள தொழில் கருவிகள் வழங்கப்படும். முதல் கட்டமாக 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ்களும்,  தலா |500 மதிப்பிலான தொழில் கருவிகளும் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.  ஊக்கத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior