உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

தி.மு.க.,வை மக்கள் அருவருப்பாக பார்க்கிறார்கள்: முன்னாள் அமைச்சர் செம்மலை

சேத்தியாத்தோப்பு:

            தி.மு.க.,வை அருவருப்பாக பார்க்கிறார்கள் என முன்னாள் அ.தி. மு.க., அமைச்சர் செம்மலை பேசினார்.கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விவசாய பிரிவு நிர்வாகிகள் தேர்விற்கான ஆலோசனைக் கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. 

              மாநில விவசாயப் பிரிவு செயலாளர் சோழன் பழனிசாமி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் அருண்மொழித் தேவன், துணை செயலாளர் முருகுமாறன், அவைத் தலைவர் கலியமூர்த்தி, தொகுதி செயலாளர் கருப்பன், நகர செயலாளர் இளஞ்செழியன், புவனகிரி முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், மாநில விவசாயப் பிரிவு நிர்வாகிகள் கமலநாதன், பாரதியார், தலைமை கழக பேச்சாளர் கோபி, முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், முன்னாள் நகர துணை செயலாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் உட் பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:

               அ.தி.மு.க.,வில் உள்ள 13 அமைப்புகளில் விவசாயப் பிரிவு செல்வாக்கில்லாத பிரிவு என்று யாரும் கருதிவிடக் கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் பொறுப்புகளை வேண்டி மனு கொடுத்திருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். அந்த அங்கீகாரத்தை ஏற்று அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். கோவையில் ஜெ., பங்கேற்ற கூட்டத்திற்கு பின் கருணாநிதி கதிகலங்கி தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார். கருணாநிதியையும், தி.மு.க.,வையும் மக்கள் அருவருப்பாகவும், அ.தி.மு.க.,வை அன் போடும் பார்க்கிறார்கள். வரும் 14ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டம் கோவையை மிஞ்ச வேண்டும். அதைக் கண்டு கருணாநிதி மீண் டும் அஞ்ச வேண்டும். இவ்வாறு செம்மலை பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior