உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

டாஸ்மாக் பணியாளர் சாவு விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்:

          விருத்தாசலத்தை அடுத்த மு.பரூர் கிராமத்தைச் சேர்ந்த  டாஸ்மாக் ஊழியர் இளங்கோவன் திங்கள்கிழமை இரவு இறந்தார். 

            இவரது சாவில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுவதால் விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை பரபரப்பான சூழல் காணப்பட்டது. விருத்தாசலத்தை அடுத்த மு.பரூர் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் இளங்கோவன். இவர் விருத்தாசலம் அடுத்துள்ள தொட்டிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிய இளங்கோவன் செவ்வாய்க்கிழமை காலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாக இளங்கோவனின் தந்தை மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

              ஆனால் 11-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என இளங்கோவனிடம் அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதால் மன உளைச்சல் அடைந்து தூக்குப்போட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விருத்தாசலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநில அண்ணா தொழிற்சங்க செயலருமான சின்னசாமி, விருத்தாசலம் வந்தபோது இறந்த இளங்கோவன் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் என்பதை அறிந்தார். 

பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநில அண்ணா தொழிற்சங்க செயலருமான சின்னசாமி தெரிவித்தது:

                 டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு போராட்டக் குழு அமைப்பை உருவாக்கி போராட உள்ளோம். இதில் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 4 அமைப்புகள் இணைந்து போராடவுள்ளன.கடந்த மாதம் 27-ம் தேதி திருச்சியில் தொழிலாளர் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் அரசுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அரசு எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.இந்நிலையில் 11-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என  ஊழியர்களை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். 

             இதில் மன உளைச்சல் அடைந்த டாஸ்மாக் பணியாளர் இளங்கோவன் தூக்குபோட்டுக் கொண்டுள்ளார். இளங்கோவனின் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

திமுகவினர் அஞ்சலி: 

               இறந்த திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோவனுக்கு திமுக நகரச் செயலர் தண்டபாணி மற்றும் ஒன்றியச் செயலர் ராமு உள்பட பல நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior