பள்ளி மாணவர் இறப் பிற்கு காரணமான நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர்.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் (16). ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை விடுதியில் உள்ள செப்டிக் டேங்க் கழிவை சுத்தம் செய்யும்படி விஜய் உள் ளிட்ட மாணவர்களிடம் வார்டன் கூறினார்.
மின் மோட்டார் இணைப்புடன் கூடிய பைப் மூலம் கழிவுநீரை வெளியேற்ற, மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் விஜய் இறந்தார். மாணவர் விஜய் ஹாஸ்டலில் உள்ள சுவிட்சை போடும் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் சோழத்தரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதனையறிந்த மாணவரின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிந்து நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பள்ளியின் ஹாஸ்டல் வார்டன்கள் அந்தோணிசாமி, பாக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர். மேலும், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நேரில் சென்று பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக