உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

விருத்தாசலத்தில் விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம்

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அரசுக் கல்லூரி விடுதி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கோட்டாட்சியர் தலையிட்டு திங்கள்கிழமை முடித்துவைத்தார்.

           விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு அருகில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி உள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி சமையலருக்கும் மாணவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி சமையலர் தனசேகரன் என்பவர் தனது உறவினர்களை அழைத்து வந்து விடுதி மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

            இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடுதி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தகவலறிந்த கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் வட்டாட்சியர் ஜெயராமன் விடுதிக்குச் சென்றனர். கோட்டாட்சியர் முருகேசன் விடுதி காப்பாளர் முருகனிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களிடம் பேசியபோது, விடுதியில் முழுமையான சுகாதார வசதிகள் இல்லை, உணவு சரியாக இருப்பது இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் விடுதி மாணவர்களை தாக்கிய விடுதி சமையலரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதற்கு கோட்டாட்சியர் முருகேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior