உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

வீராணம் பாசன வாய்க்கால்கள் சீரமைப்புப் பணி தீவிரம்

சிதம்பரம்:

           வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் 22 கோடி ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

           சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில் பாதிப் பின்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க் கின்றனர்.காவிரி கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக வீராணம் ஏரி உள்ளது. காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட காவிரி கடைமடை பகுதி விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதி பாசனத்திற்காக வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் மூலமும், வடவாற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க் கால்கள் மூலமும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

               அந்த வகையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள், பாசன வாய்க்கால்கள் தூர்ந்து பாசனத்திற்குப் போதுமான தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று 22 கோடி ரூபாய் செலவில் வடவாறு மற்றும் வீராணம் பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைப்புப் பணி கடந்த இரண்டு மாதங் களாக தீவிரமாக நடந்து வருகிறது. வீராணம் ஏரியில் கீழ்கரையில் 28 பாசன வாய்க் கால்களும், மேல் கரையில் 6 மற்றும் வடவாறு உள்ளிட்ட 59 பாசன வாய்க் கால்கள் உள்ளது. இதில் பெரும்பாலான வாய்க் கால்கள் தூர் வாருதல், மதகு சீரமைப்பு, தடுப்புச் சுவர் கட்டுதல் பணி நடந்து வருகிறது. சம்பா சாகுபடிக்கு இன்று 11ம் தேதி கீழணையில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் வரும். அதனால் வடவாறு மதகு மற்றும் பாசன வாய்க்கால் பணிகள் அவசர, அவசரமாக முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

            ஆனால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விட காலம் இருப்பதால் அந்தப் பகுதிகள் முடிய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என தெரிகிறது. சில இடங்களில் பாசன வாய்க்கால் பணிகள் மிக தீவிரமாகவும், சில இடங்களில் மந்தமாகவும் நடந்து வருகிறது.இந்தத் திட்டத்தில் வீராணம் ஏரிக் கரையில் களியமலைக்கும் கந்தகுமாரனுக்கும் இடையே குமுளி மதகு உள்ளது. இந்த மதகு வழியாக கலியமலை, பூர்த்தங்குடி, நெடுஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1,245 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் 6.5 கி.மீ., நீள முள்ள இந்தப் பாசன வாய்க்கால் மண்மேடிட்டு தூர்ந்து போதுமான தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப் பட்டு வந்தனர்.

                  இதுதொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையின் பேரில், குமுளி மதகு பகுதியில் இருந்து பாசன வாய்க்கால் முழுவதும் தூர்வாரி, இரு கரை பகுதிகளிலும் தலா 250 மீ., நீளத் திற்கு "கான்கிரீட்' தடுப்பு சுவர் அமைக்க 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வீராணம் ஏரிப் பாசன வாய்க்கால் பணிகள் பெரும்பாலானவை முடியாத நிலையில், சம்பா பயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior