உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

மேல்மாம்பட்டில் கலங்கலான குடிநீர்

பண்ருட்டி:

           பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு ஊராட்சியில் குடிநீர் தூர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

            பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு மேற்கு தெரு, மாரியம்மன் கோவில் தெருவில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்காக மோட் டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக குடிப்பதற்கு பயன் படுத்த முடியாத நிலையில் குடிநீர் செம்மண் கலந்த பழுப்பு நிறத்தில் எண்ணெய் படிந்தது போல் வருகிறது. 

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 

                 "கலங்கலாக வரும் குடிநீர் துணி துவைப்பதற்கும், கால்நடைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றோம். ஒரு சில நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. மேல்மாம்பட்டில் உள்ள கெம்ப்ளாஸ்ட் ஆலைக் கழிவுகள் நிலத்தடியில் கலந்து குடிநீர் மாசு ஏற்பட்டதால் குடிநீர் நிறம் மாறி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் என அனைவரிடமும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை' என தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior