உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

மாணவர்களுக்கு அதிக சலுகை அளிக்கும் மாநிலம் தமிழகம்: எம்.எல்.ஏ.அய்யப்பன்

கடலூர்:
 
           மாணவர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கும் மாநிலம் தமிழகம் என்று, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் பெருமிதம் தெரிவித்தார். 

            கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம், முந்தைய ஆண்டில் 74 சதமாக இருந்து, கடந்த ஆண்டு 84 சதமாக உயர்ந்தது. இதற்காக ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. 

பணியில் உள்ள ஆசிரியர்களையும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் பாராட்டி, பரிசுகளை வழங்கி அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசியது:

             கல்விக்காக இரு அமைச்சர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்வர் கருணாநிதி. கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் மாணவர்களுக்கு அதிக சலுகை வழங்கும் மாநிலம் தமிழகம்தான். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. 

            இதனால் மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளை நாடி வருகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கு தரமான கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.நான் கல்வி அமைச்சரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு |67 லட்சத்திலும், திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்குத் தலா 1 கோடியிலும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றார் அய்யப்பன்.

                இத்தகைய விழாக்கள் நடத்துவதற்கு வசதியாக, தமிழ்ச் செம்மொழி நினைவு கலைஞர் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையை ஏற்படுத்த அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து,  50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.விழாவுக்கு தலைமை ஆசிரியர் க.சண்முகம் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் பி.வெங்கடேசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஞானப்பிரகாசம், பி.சந்தானலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமை ஆசிரியர் தி.பாபு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior